சமீபத்தில் 2015 ஆம் ஆண்டுக்கான, தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில்... இதில் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார் ஜோதிகா. 

ஒவ்வொரு ஆண்டும் திரைப்பட கலைஞர்களை கௌரவிக்கும் விதமாகவும், அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும்,, தமிழ்நாடு அரசு பல்வேறு பிரிவுகளின் கீழ் சினிமா பிரபலங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான விருதுகள் மார்ச் 6ஆம் தேதி, மாலை 6:00 மணி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

RK Suresh: மறுத்த யுவன்! அந்தர் பல்டி அடித்த ஆர்கே சுரேஷ்.! சர்ச்சைக்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளி..!

அதன்படி சென்னை ராஜா அண்ணாமலைபுரம், முத்தமிழ் பேரவை, டிஎன் ராஜரத்தினம் கலையரங்கில் தற்போது திரை பிரபலங்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் சிறந்த நடிகைக்கான விருதினை, ஜோதிகா '36 வயதினிலே' படத்திற்காக பெற்றார். இயக்குனர் ரோஷன் அண்ட்ரிவ்ஸ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தை, 2d என்டர்டைன்மென்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்திருந்தார்.

காதலோடு என்ட்ரி கொடுத்த ராதிகா! கட்டியணைத்து முத்தமழை பொழிந்த ஆனந்த்! ஆனந்த கண்ணீரில் முகேஷ் அம்பானி!

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான, இப்படம் ஜோதிகாவின் ரீ என்ட்ரி படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்காக ஏற்கனவே சிறந்த நடிகைக்கான ஃபிலிம் சார் விருது, உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வென்ற ஜோதிகா... தற்போது தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார். வீட்டில் இருக்கும் பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்கிற ஊக்கத்தை கொடுக்கும் விதமாக, இப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஜோதிகாவுக்கு ஜோடியாக ரகுமான் நடித்திருந்தார். மேலும் அபிராமி, நாசர், டெல்லி கணேஷ், கலைராணி, போஸ் வெங்கட் , இளவரசு, எம்எஸ் பாஸ்கர், உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.