ப்ரீ வெட்டிங் கொண்டாட்டத்தில்... ராதிகா மெர்ச்சன்ட் திரைப்பட பாடலுக்கு வாயசைத்து கொண்டு காதலோடு என்ட்ரி கொடுத்த நிலையில், ஆனந்த் அம்பானி கட்டியணைத்து, முத்தம் கொடுத்த எமோஷ்னல் தற்போது சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரலாகி வருகிறது.
முகேஷ் அம்பானி மற்றும் நிதா அம்பானி தம்பதியினரின் இளைய மகனான ஆனந்த் அம்பானியின், திருமணம் ஜூலை மாதம் நடைபெற உள்ள நிலையில், கடந்த மார்ச் 1-ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை இவர்களின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களை அம்பானி குடும்பம் கோலாகலமாக நடத்த திட்டமிட்டது. அதன்படி ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி குஜராத்தில் உள்ள ஜாம்நகர் பகுதியில் நடந்தது.
இதில் பாலிவுட் திரையுலகை சேர்ந்த பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் தங்களின் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். அதே போல்.. விளையாட்டு வீரர்கள், தேசிய அளவிலான பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலர் கலந்து கொண்டு ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் ஜோடிகளை வாழ்த்தினர். மேலும் அவ்வப்போது இந்த ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட சில வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வைரலானது.

அந்த வகையில், ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியின் மூன்றாவது நாளில், ராதிகா மெர்ச்சண்ட்... நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வருகை தந்தபோது, கபி குஷி கபி கம் படத்திலிருந்து 'ஷாவா ஷவா' என தொடங்கும் காதல் பாடலுக்கு வாயசைத்து கொண்டு என்ட்ரி கொடுத்து அனைவரையும் திகைக்க வைத்தார். இதை தொடந்து, மிகவும் எமோஷ்னலாக ராதிகா மெர்ச்சண்டை கட்டிப்பிடித்து தன்னுடைய காதலை வெளிப்படுத்திய ஆனந்த் அவருக்கு முத்த மழை பொழிந்தார்.

மகனின் சந்தோஷத்தை பார்த்து, மனம் நிறைந்து போன... முகேஷ் அம்பானி - நிதா அம்பானி ஜோடி, ஆனந்த கண்ணீர் விட்டனர். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
