MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Diwakar : 'வாட்டர்மெலன் ஸ்டார்' திவாகர் கைது செய்யப்பட்டது ஏன்? நடிப்பு அரக்கன் செய்த அட்ராசிட்டி என்ன?

Diwakar : 'வாட்டர்மெலன் ஸ்டார்' திவாகர் கைது செய்யப்பட்டது ஏன்? நடிப்பு அரக்கன் செய்த அட்ராசிட்டி என்ன?

Watermelon Star Diwakar Arrested : பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆன திவாகர், மதுரையில் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அதன் பின்னணியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 13 2026, 10:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Reason Behind Watermelon Star Diwakar Arrest
Image Credit : AI Image

Reason Behind Watermelon Star Diwakar Arrest

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் "வாட்டர்மெலன் ஸ்டார்" என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பிரபலமான திவாகர், காவல்துறையினரால் மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை சேத்துப்பட்டு மற்றும் நாசரேத்பேட்டை காவல் நிலையங்களில் பதிவான வழக்குகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிக்டாக் தடை செய்யப்பட்ட பிறகு, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் கவனம் ஈர்த்த திவாகர், நடிகர் சூர்யாவின் கஜினி திரைப்பட காட்சிகளை தனது பாணியில் மீண்டும் நடித்தும், தர்பூசணியை (Watermelon) மையமாகக் கொண்ட வீடியோக்களை வெளியிட்டும் ரசிகர்களிடம் அறிமுகமானார். இதன் மூலம் "வாட்டர்மெலன் ஸ்டார்" என்ற அடையாளத்தை உருவாக்கிக் கொண்ட அவர், பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று மேலும் பிரபலமானார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
சர்ச்சைகளில் சிக்கிய திவாகர்
Image Credit : Asianet News

சர்ச்சைகளில் சிக்கிய திவாகர்

பிரபலமானதைத் தொடர்ந்து, திவாகரைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகளும் எழுந்தன. முன்னதாக, தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர், நடிகர் மற்றும் பாடகர் உள்ளிட்ட சிலர் தன்னை அவமதித்ததாகவும், மிரட்டியதாகவும் குற்றம்சாட்டி அவர் சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டிருந்தார். தனது வளர்ச்சியை பொறாமைப்படுவோர் திட்டமிட்டு தன்னை குறிவைத்து வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக, சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு நேர்காணல் வழங்கச் சென்றபோது, அங்கு தன்னை அறைக்குள் அடைத்து வைத்து தாக்கியதாக திவாகர் குற்றம்சாட்டினார். இந்த சம்பவம் தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டதுடன், சென்னை சேத்துப்பட்டு காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார்.

Related Articles

Related image1
விஜயைவிட நான் பெரிய ஆளு.. எனக்கு திரிஷா மாதிரி மனைவி வேணும்..! ‘தர்பீஸ்' திவாகர் அடாவடி..!
Related image2
செட்டில் மோதல்... கதறி அழுத திவாகர்! - குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொடரும் சர்ச்சைகள்!
34
திவாகர் மீது புகார்
Image Credit : facebook

திவாகர் மீது புகார்

தனது அனுமதியின்றி எடுத்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, அதன்மூலம் பணம் சம்பாதித்ததாகவும், தனது அவமானத்தை வணிகமாக மாற்றியதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மறுபுறம், சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் நிர்வாகம், திவாகர் கேமரா, லைட் உள்ளிட்ட படப்பிடிப்பு உபகரணங்களை சேதப்படுத்தியதாக காவல்துறையில் புகார் அளித்தது.

இருதரப்பினரின் புகார்களின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இந்த வழக்குகளின் தொடர்ச்சியாக, மதுரை புதூரில் இருந்த திவாகரை சென்னை காவல்துறையினர் கைது செய்து, மேலதிக விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர்.

44
திவாகர் கைது
Image Credit : youtube/jiohotstartamil

திவாகர் கைது

இதற்கிடையில், கைது செய்யப்படுவதற்கு முன் வெளியிட்ட வீடியோவில் திவாகர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தன்னை சட்டவிரோதமாக அடைத்து வைத்து பலர் தாக்கியதாகவும், அதற்கான ஆதாரங்களை காவல்துறையிடம் வழங்கியிருந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

மேலும், சம்பவம் நடந்த இடத்தின் சிசிடிவி காட்சிகளை முழுமையாக ஆய்வு செய்து, இந்த வழக்கை வேறு அதிகாரி விசாரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். சில காவல்துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் அரசுக்கும் காவல்துறைக்கும் களங்கம் ஏற்படுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

அதேநேரத்தில், தனது பெயரை பயன்படுத்தி சர்ச்சையான வீடியோக்களை வெளியிட்டு, அதிக பார்வைகளும் சந்தாதாரர்களும் பெற்று யூடியூப் சேனல்கள் லாபம் அடைகின்றன என்றும் திவாகர் குற்றம்சாட்டினார். நேர்மையாக உழைத்து வாழ்பவர்களை விட, பிறரை அவமானப்படுத்தி பணம் சம்பாதிக்கும் நடைமுறை அதிகரித்து வருவது வருத்தமளிப்பதாகவும் அவர் தனது வீடியோவில் தெரிவித்திருந்தார்.

தற்போது இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் முடிவில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : மனோஜின் ரகசியம் உடையப்போகுதா? பேரன் வேண்டும் என உருகிய அண்ணாமலை
Recommended image2
Engal Thangam OTT: ஓடிடியில் வெளியாகும் சமந்தாவின் எங்கள் தங்கம்.. எங்கு, எப்போது தெரியுமா?
Recommended image3
S Janaki Vs Savitri: சாவித்திரிக்காக பாடமாட்டேன் - S. ஜானகி எடுத்த சபதம்.! காரணம் என்ன தெரியுமா?
Related Stories
Recommended image1
விஜயைவிட நான் பெரிய ஆளு.. எனக்கு திரிஷா மாதிரி மனைவி வேணும்..! ‘தர்பீஸ்' திவாகர் அடாவடி..!
Recommended image2
செட்டில் மோதல்... கதறி அழுத திவாகர்! - குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொடரும் சர்ச்சைகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved