Jyothika was talking like that! Boiling mather associations against director Bala ...

நடிகை ஜோதிகாவை ‘நாச்சியார்’ படத்தில் ஆபாச வசனம் பேச வைத்த இயக்குனர் பாலாவுக்கு மாதர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் ‘நாச்சியார்’.

இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் வெளியானது. அதில், ஜி.வி.பிரகாஷ் குற்றவாளி கதாபாத்திரத்திலும், ஜோதிகா போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

இந்த டீசரின் இறுதியில் காக்கிச் சட்டை அணிந்திருக்கும் ஜோதிகா, காவல் நிலையத்தில் சிலரை பார்த்து அசிங்கமாக திட்டும்படி காட்சி இடம்பெற்றுள்ளது.

இந்த வசனத்துக்கு மாதர் சங்க அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இயக்குனர் பாலா, ‘விளம்பரத்துக்காகவே இதுபோன்ற வசனத்தை ஜோதிகாவை பேச வைத்துள்ளார்’ எனவும். 'ஆபாச வார்த்தையை பயன்படுத்துவதுதான் பெண் சுதந்திரமா?’ எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.