நடிகர் சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் படம் ''பொன்மகள் வந்தாள்''. ஜோதிகா கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தை ஜேஜே ஃப்ரெட்ரிக் இயக்குகிறார். இந்த படத்தில் பார்த்திபன், பாக்யராஜ், பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
கோவிந்த் வசந்தா இசையில் படம் உருவாகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக 2 டி நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி சரியாக சொன்ன நேரத்தில் ''பொன்மகள் வந்தாள்'' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. 

அதில் ஜோதிகாவின் கேரக்டர் லுக்கும் இடம் பெற்றுள்ளது. இந்த படத்தில் ஜோதிகா முதன் முறையாக வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் ''பொன்மகள் வந்தாள்'' திரைப்படம் முழுக்க, முழுக்க திரில்லர் கதை அம்சம் கொண்டது என்றும், இந்த படம் வரும் மார்ச் 27ம் தேதி வெளியாக உள்ளதாகவும் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.