Vikram Surya such as pictures of the heroes who gave the breakthrough success of director Bala.

விக்ரம், சூர்யா, போன்ற முன்னணி நாயகர்களின் வெற்றிக்கு திருப்புமுனை படங்களை தந்தவர் இயக்குனர் பாலா.

கடந்த ஆண்டுகளில் வெளியான அவன் இவன் தாரை தப்பட்டை போன்ற திரைப்படங்கள் பாலாவுக்கு படுதோல்வியை தந்தன.

இதனால் சற்று இடைவெளி எடுத்துக்கொண்ட பாலா தற்போது புதிய கதைகளத்துடன் இறங்கியுள்ளார்.

36 வயதினிலே திரைப்படத்தில் ரீ என்ட்ரி ஆன ஜோதிகா மகளிர் மட்டும் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது முதன்முறையாக ஜோதிகா இந்த திரைப்படத்தின் பெயரான நாச்சியார் என்ற ரோலிலேயே நடிக்கிறார்.

பாலாவின் பரதேசி படத்துக்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோதிகாவுடன் நடிக்கிறார்.

இந்த படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சூர்யா சமூக வலைதளங்களில் வெளியிட்டதோடு மட்டுமல்லாமல் தனது அண்ணன் பாலா படத்தில் ஜோதிகா நடிப்பது பெருமைக்குரியது என பதிவிட்டுள்ளார்.

நாச்சியார் திரைப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.