தற்போதைய டாப் பிசி ஹீரோயின்களுக்குப் போட்டியாக அடுத்தடுத்து படங்கல் கமிட் பண்ணி நடித்துவரும் ஜோதிகா, இனி முழு நேர நடிகையாக மாறி வருடத்துக்கு 4 படங்களுக்கும் மேல் நடிக்கும் முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. இவரது ‘ராட்சசி’படம் ரிலீசுக்குத் தயாராக உள்ள நிலையில் அடுத்த படமும் சென்சாருக்கு சென்று திரும்பியுள்ளது.

சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பின் சுமார் 6 வருடங்ள் படங்களில் நடிப்பதை நிறுத்தியிருந்த ஜோதிகா மீண்டும் ‘36 வயதினிலே’படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார்.அடுத்து ‘மகளிர் மட்டும்’,’நாச்சியார்’,’செக்கச்சிவந்த வானம்’ என்று தொடர்ச்சியாக நடித்து வந்த ஜோதிகா இந்த ஒரு வருடத்தில் மட்டும் இதுவரை மூன்று படங்களில் நடித்து முடித்துவிட்டார். அரசுப் பள்ளி ஆசிரியையாக அவர் அசத்தியிருக்கும் ‘ராட்சசி’ இந்த மாதம் திரைக்கு வருகிறது.

அடுத்ததாக `குலேபகாவலி' படத்தை இயக்கிய கல்யாண் அடுத்ததாக ஜோதிகா, ரேவதியை வைத்து ’ஜாக்பாட்’ படத்தை இயக்கியுள்ளார். ஆக்‌ஷன் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் யோகி பாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஆனந்த்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைக்க, விஜய் படத்தொகுப்பை கவனிக்கிறார்.இந்நிலையில், சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு 'யூ' சான்றிதழ் அளித்துள்ளனர். இந்த படத்தின் ரிலீஸ் தேதி ‘ராட்சசி’ ரிலீஸுக்குப்பின்னர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.