பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமான முதல் இரண்டு வாரத்தில், அனைத்து போட்டியாளர்களாலும் வெறுத்து ஒதுக்கப்பட்டவர் ஜூலி தான்.

ஜூலியை அனைவரும் ஒதுக்கினாலும், மற்றவர்களுடன் சேராமல் ஜூலிக்கு ஆறுதல் கூறி தேற்றியவர் ஓவியா... ஆனால் ஓவியாவை அனைவரும் ஒதுக்கும் போது கைகட்டி வேடிக்கை பார்த்தது மற்றும் இல்லாமல், அரவணைத்தவரையே பொய் சொல்லி மாட்டி விட்டவர் ஜூலி.

ஏற்கனவே இவரது நடவடிக்கைகளை பார்த்து, கொந்தளித்திருந்த மக்கள் இவர் இப்படி செய்ததால் மேலும் கோபம் கொண்டனர். இந்நிலையில் தற்போது, கமல் இது பற்றி ஜூலியிடம் கேட்டு நீங்கள் செய்தது துரோகம் என்று தெரியவில்லையா என பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

முதலில் பதில் கூற முடியாமல் வாய் அடைத்து போய் அமர்ந்திருந்த ஜூலி, உண்மையை மறைக்க வழியில்லாமல் நான் செய்தது துரோகம் என ஒத்துக்கொண்டு அங்கிருந்து பிக் பாஸ் அறையில் இருந்து வெளியேறினார்.