பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்கிற முனைப்புடன் களமிறங்கியவர் நாடோடி படத்தில் காமெடியனாக நடித்த பரணி.

ஆனால் இவர் தான் உண்டு தன்னுடைய வேலை உண்டு என்று இருந்தாலும் இவரை அனைத்து போட்டியாளர்களும் தனிமை படுத்தி, மனஅழுத்தத்திற்கு கொண்டு சென்று, சுவர் ஏறி குதித்து தப்பித்து ஓட முயன்றார். 

இவர் இந்த நிலைக்கு செல்ல காரணமாக இருந்தவர்களில் ஒருவர் ஜூலி, இவர் கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது இவருடைய தவறை உணர்ந்து நடு ரோட்டில் நடிகர் பரணியிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பது போல ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த  வீடியோவை பார்த்த பலர் ஜூலி வெளியில் வந்தும் நடிக்கிறார் என்பது போன்ற கருத்துக்களையும், மற்றொரு தரப்பினர் இனியாவது திருந்துங்கள் ஜூலி என்று அவருக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.