julie said bindhu more persons slapping me why?
ஓவியா வீட்டுக்குள் இருந்த வரை ஓவியாவை ஒதுக்கியவர்களுக்கெல்லாம் இப்போது தான் அவர் மீது பாசம் வந்துள்ளது. ஓவியா ஜூலியிடம் பேசும்போதெல்லாம் ஓவியாவிடம் பேசாமல் அவரை விட்டு விலகி சென்றவர் ஜூலி. மேலும் ஓவியா மீது வீண் பழியையும் போட்டவர் என்பதும் அனைவரும் அறிந்தது தான்.
தற்போது பிந்து மாதவியிடம் ஜூலி பேசும்போது, நான் இந்த வாரம் வெளியில் போனதும் ஓவியாவை தொடர்பு கொண்டு பேசுவேன் என்றும், என்ன திட்டினாலும் பரவாயில்லை தொடர்ந்து அவரிடம் பேசி விடுவேன் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் தன்னை அடித்தாலும் பரவா இல்லை, அடித்த பின் என்னை கட்டி பிடித்து விடுவார் ஓவியா என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என கூறியுள்ளார். நான் இது வரை பல நோயாளிகளிடம் அடி வாங்கியுள்ளேன் என ஜூலி கூறினார்.
பிந்து மாதவி பின் ஏன் நீங்க ஓவியாவிடம் மன்னிப்பு கேட்கவில்லை என கேட்க, நான் ஒரு முறை கேட்டு விட்டேன் திரும்ப திரும்ப அவர் மன்னிப்பு கேட்க சொன்னதால் தான் கேட்கவில்லை என்று மழுப்பினார்.
