julie request for public

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜூலி, எதிர்பார்த்த அனைவருக்கும் ஏமாற்றங்களை மட்டுமே கொடுத்தார்.

அந்த அளவுக்கு காழ்ப்பு உணர்ச்சியும், பொய் சொல்லும் பெண்ணாகவும் மட்டுமே அவர் அனைவர்க்கும் தெரிந்தார். தற்போது எப்படியும் தன் மீது ஏற்பட்டுள்ள கறையைப் போக்கி, பிரபலமாகி விட வேண்டும் என்கிற முனைப்போடு செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஒரு வயதுக் குழந்தை சிறுநீரகப் பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வருவதாகவும், அந்தக் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற 20 லட்சம் வரை செலவு செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இவர்களால் இவ்வளவு பணம் கொடுத்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலையில் உள்ளனர். ஆகவே தயவு செய்து இவர்களுக்கு உதவுங்கள் என கையெடுத்துக் கும்பிட்டு கெஞ்சுவது போல் ஒரு வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.

ஜூலி நல்ல கருத்தை முன்வைத்து இந்த வீடியோவில் பேசி இருந்தாலும் பலர் ஜூலி இதிலும் நடிக்கிறார் என்பது போல் தங்களுடைய கருத்தைத் தெரிவித்து வருகின்றனர்.