ஜல்லி கட்டு போராட்டத்தில், காது வலிக்கும் அளவிற்கு காட்டு கத்து கத்தி, பல ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சியின் கவனத்தை ஈர்த்தவர் ஜூலி. இதன் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து, உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய, பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பலரது கவனத்தையும் ஈர்த்தார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இவர் தான் ஜெயிப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏனோ... கிடைத்தது ஏமாற்றமே, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கேமரா இருப்பதை மறந்து, சில விஷயங்களை செய்ததால் சர்ச்சையில் சிக்கினார்.

மக்களின் ஓட்டுகள் குறைவாக பெற்று, வெளியே வந்ததும் தொகுப்பாளினியாகவும், திரைப்படமே நடிக்க மாட்டேன் என கூறி விட்டு ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்தார். ஆனால் தற்போது வரை அந்த படங்கள் இன்னும் வெளியாகாமல் தான் உள்ளது.

பின் அரசியலுக்கு வர போறேன் என வீடியோ, ஆண் நண்பருடன் அடிக்கடி புகைப்படம் போட்டு, நானும் இருக்கேன்... நானும் இருக்கேன் என கூறி வந்த இவர், இப்போது வீடியோ ஒன்றை பிரேமம் பட நாயகி ரேஞ்சுக்கு பீல் பண்ணி வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் பலர், இன்னும் ஒரு படம் கூட வெளியாக வில்லை இப்படி ஹீரோயின் ரேஞ்சுக்கு பீல் பண்ணி வீடியோவா... என வழக்கம் போல் பங்கமாக கலாய்த்து வருகிறார்கள். 

Scroll to load tweet…