julie love failure in one month
பிக் பாஸ் என்கின்ற நிகழ்ச்சியில் மூலம் பலரது வெறுப்பை மட்டுமே சம்பாதித்துக்கொண்டு வெளியே வந்த ஜூலிக்கு தற்போது சினிமாவில் நடிப்பதற்கு கூட வாய்ப்புகள் பல குவிந்து வருகிறதாம்.
இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் 'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வரும் தொகுப்பாளர் ரக்ஷனை ஜூலி காதலித்து வருவதாகவும் இவர்கள் இருவரும், சென்னையில் உள்ள மால்களில் சுற்றி வருவதாகவும் கூறப்பட்டது.

மேலும் ரக்ஷன் ஜூலிக்கு மோதிரம் ஒன்றை பரிசளித்துள்ளதாகவும், அந்தத் தகவலை ஜூலி நண்பர்களிடம் கூறியதால்... இந்தத் தகவல் நண்பர்கள் மூலமாக வெளியே வர தொடங்கியது.
இதனைக் கேள்விப் பட்ட ரக்ஷன், ஜூலிக்கு போன் செய்து ' நீ உன் வாயலதான் கெடப் போற... ஏன் என்னோட வாழ்க்கையையும் சேர்த்து சீரழிக்குற' உன் நண்பர்கள் மூலமாகத்தான் நீயும் நானும் பழகி வருவது மற்றும் உனக்கு நான் மோதிரம் பரிசளித்த விஷயம் வரை வெளியே போய் உள்ளது எனக் கூறி. இனி என் மூஞ்சிலேயே முழிக்காதே எனக் கூறிவிட்டாராம்.

இதனால் கோபமடைந்த ஜூலியும் ரக்ஷன் பரிசளித்த மோதிரத்தை அவரிடமே கொடுத்து விட்டதாகக் கூறப்படுகிறது. ஜூலி தொகுப்பாளராக மாறி, நல்ல பெயரை எடுப்பதற்குள் பல சர்ச்சைகளுக்கு ஆளாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
