கடந்த சில வாரங்களாக கொஞ்சம் டல்லடித்துப்போன பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு புதிய விருந்தினர்கள் வருகையால் புத்துயிர் வந்துள்ளது என்றுதான் சொல்லவேண்டும்.

இத்தனை நாட்களாக எந்த ஒரு சண்டை சச்சரவும்  இல்லாமல் போய் கொண்டிருந்த நிகழ்ச்சியில் இனி புதிதாக  வந்துள்ள 'ஆர்த்தி' மற்றும் 'ஜூலியால்' கண்டிப்பாக பல பிரச்சனைகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிலும் ஜூலி பிக் பாஸ் வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்ததுமே பொய் பேசியது தான் ஹை லைட்... பிக் பாஸ் "ஒரு வாரத்திற்கு ஜூலி மற்றும் ஆர்த்தி" ஆகியோர் விருந்தினர்களாக இந்த வீட்டிற்கு  வருவார்கள் என்று கூறினார்.

ஆனால் ஜூலி வீட்டிற்குள் வந்ததும் "இன்று ஒருநாள்  மட்டும் தான் இருக்க போவதாக பொய் கூறினார்" இதனால் வீட்டிற்கு வந்ததுமே பொய் சொல்ல ஆரம்பித்துவிட்டார் ஜூலி என பலர் மீண்டும் ஜூலியை விமர்சிக்க  ஆரம்பித்துள்ளனர்