julie first movie

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி கலந்துகொண்டு வெளியே வந்தது முதல் அடுக்கடுக்காக பல சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கிக் கொண்டே தான் உள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இவருக்கு நடிகர் சமுத்திரக்கனி, ஜூலியின் நண்பர்கள், குடும்பத்தினர் என பலர் அறிவுரை கூறியும் அதை சற்றும் மதிக்காமல் தன்னுடைய இஷ்டம் போல் தான் நடப்பேன் எனக் கூறி வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஜூலையில் கழுத்தில் ஒருவர் கத்தி வைத்திருப்பது போல் ஒரு புகைப்படம் வைரலாக பரவியது. தற்போது அந்தப் புகைப்படம் குறித்து தகவல் வெளிவந்ததுடன், ஜூலியின் முதல் படம் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல விளம்பரப் பட இயக்குனர் பாபா பகுர்தீன் தான் அவர். ராமநாதபுரம் இலாஹி ஷாப்பிங் மாலுக்காக அவர் இயக்கிய விளம்பர வீடியோவில் ஜூலி நடித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் அது எனக் கூறப்படுகிறது.

ஜூலி இந்த விளம்பரத்தில் நடிக்க மால் உரிமையாளர் வேண்டாம் என கூறியும் பகுர்தீன் பலமுறை வற்புறுத்தி ஒப்புக் கொள்ளவைத்துள்ளார்.

மேலும் பகுர்தீன் இயக்கவுள்ள ஒரு படத்தில் ஜூலி ஹீரோயினுக்குச் சமமான வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.