ஜூலியின் போட்டோவில்... திடீர் என பூவைத்து பார்த்த போது, பலருக்கு முதலில் மனம் ஒரு நிமிடம் பதறி போனாலும், உண்மையான காரணம் தெரிய வந்ததும் கோவம் பொத்து கிட்டு வந்துள்ளது. 

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது விதவிதமாக கோஷம் போட்டு மீடியாக்களின் கவனத்தை ஈர்த்தவர் ஜூலி. அதன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். ஜூலி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போது அதை ரசிகர்கள் பெருமையாக பார்த்தார்கள்.

 

ஆனால் இடையில் காயத்ரியுடன் சேர்ந்து கொண்டு ஜூலி செய்த சில காரியங்கள் அனைவரையும் கடுப்பாக்கியது. அதனால் பிக்பாஸ் வீட்டில் மட்டுமல்லாது, தமிழக ரசிகர்களிடம் ஜூலிக்கு கெட்ட பெயர் மட்டுமே மிஞ்சியது. அப்போது மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு மெயின் கன்டன்ட்டாக இருந்தவர் ஜூலி தான். அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகும் ஜூலியை நெட்டிசன்கள் விடுவதாக இல்லை. அவர் என்ன செய்தாலும், அதை மீம்ஸ் கிரியேட் செய்து கலாய்த்து வருகின்றனர். 

தற்போது கொரோனா பீதி உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் தஞ்சமடைந்துள்ளனர். இந்த சமயத்தில் நர்ஸ் என்ற பொறுப்புணர்ச்சி கொஞ்சமும் இல்லாமல் பிக்பாஸ் ஜூலி, சோசியல் மீடியாவில் செய்து வரும் சேட்டைகள் நெட்டிசன்களை செம்ம கடுப்பாக்கியுள்ளது. 

பின் நானும், கொரோனா பணியில் இறங்க உள்ளதாக அறிவித்த அவர், மீண்டும் அது குறித்து வாய் திறக்கவே இல்லை. வழக்கம் போல், வீட்டில் இருந்தபடி விதவிதமான புகைப்படம் போடுவதில் தான் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், பிக்பாஸ் ஜூலியின் பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டுள்ளது. ரசிகர்கள் மற்றும் பலர் இவருக்கு சமூக வலைத்தளத்தில் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆனால் ஜூலி வெறியன் ஒருவன், பூஜை அறையில் ஜூலியின் புகைப்படத்தை வைத்து அதுக்கு பூவெல்லாம் பூட்டு பூஜித்துள்ளார். இதற்கு தொடர்ந்து பலர் விமர்சித்து வருகிறார்கள். மேலும் ஜூலியை இப்படி பார்த்ததும் மனசு பதறிவிட்டதாகவும் கூறி வருகிறார்கள். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.