julie crying for kalamaster
ஜல்லிக்கட்டு போராட்டத்திற்குப் பின் என்றைக்கு ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் காலடி எடுத்து வைத்தாரோ அன்று முதல் பல்வேறு தரப்பினராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறார். இவரை இப்படி அனைவரும் மிகவும் கோபமாகப் பார்க்கக் காரணமும் இவர்தான்.
ஆரம்பத்தில் பிரபலங்கள் பலர் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் சாமானிய பெண்ணாகக் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் அறியப்பட்ட இவருக்கு அனைவரும் ஆதரவு கொடுத்தனர். பலர் பிக் பாஸில் ஜூலி வெற்றி பெற வேண்டும் என இவர் உள்ளே சென்ற சில நாட்களில் பூஜைகள் கூட செய்தனர்.

ஆனால் ஜூலி மக்களின் எதிர்பார்ப்பிற்கு சற்றும் தகுதியற்றவர் என நிரூபிப்பது போல பல்வேறு செயல்களில் ஈடுபட்டார். இதனால் ஜூலி பலரது பார்வைக்கும் தற்போதுவரை போலியாகவே தோற்றம் அளிக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளான ஜூலி, தற்போது கலா மாஸ்டர் தயாரிப்பில் அவரே நடுவராக உள்ள குழந்தைகள் நடன நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்குவது நன்றாக இல்லை என்றும், இந்த நிகழ்ச்சியில் இவர் ஆடிய நடனம் சரியில்லை என்றும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.

தற்போது கலா மாஸ்டர் சமீபத்தில் இது குறித்து நிகழ்ச்சியில் பேசினார். அப்போது யாரையும் திட்டும் உரிமை ஒருவருக்குக் கிடையாது என்றும்... தவறு அனைவரும் செய்வது தான் அதனை திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் அதைச் செய்யாமல், மீண்டும் மீண்டும் அவரை காயப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை என மிகவும் கோபமாகக் கூறினார். இவர் இதைப் பேசும் போது மேடையிலையே கதறி அழுதார் ஜூலி.
