julie acting The revolutionary girl

பிக்பாஸ் புகழ் ஜூலி ஹீரோயினாக நடிப்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். இந்நிலையில் ஜூலி நடிக்கும் படத்தில் அவரின் கதாபாத்திரம் குறித்த ருசிகர தகவல் வெளியாகியுள்ளது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தனது மிரட்டல் வசனங்களால், சமூக வலைத்தளங்களில் மிகுந்த பாராட்டை பெற்றவர் ஜூலி. ஆளும் மத்திய மாநில அரசை எதிர்த்து இவர் பேசிய வசனங்களால் இவருக்கு கொலை மிரட்டல்கள் வந்ததாகவும், ஏன் கொலை செய்யப்பட்டு விட்டதாகவும் கூட வதந்திகள் தீயாய் பரவின . 

அதன்பிறகு ஜல்லிக்கட்டு மூலம் கிடைத்த புகழால், பிரபல தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸிற்கு அழைக்கப்பட்டார் ஜூலி. ஆரம்பத்தில் அப்பாவி பெண்ணாக இருந்த ஜூலி, பின்னர் தனது நடவடிக்கைகளால் மக்களிடம் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டார். குறிப்பாக மக்களுக்கு பிடித்த ஓவியாவிடம் இவரும் டான்ஸ் மாஸ்டர் காயத்ரி ரகுராமும் நடந்து கொண்ட விதம் ஓவியா ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த மக்களையும், இவர் மீது இருந்த நல்ல பெயரை இழக்க வைத்தது. அதன்பின்னர் பிக்பாஸிலிருந்து வெளியேற்றப்பட்டார் ஜூலி.

ஆனால் தொகுப்பாளர் ஆக வேண்டும் என்ற அவரின் ஆசைப்படி பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் ஆகிவிட்டார். மேலும் நடிகர் விமலின் மன்னர் வகையறா படத்திலும் நடித்துள்ளார். அடுத்ததாக கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார்.

இதுகுறித்து அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப் படுத்தியுள்ளார். ஜூலிக்கு ஜோடியாக தப்பாட்டம் படத்தில் நடித்த சுதாகர் ஹீரோவாக நடிப்பார் என கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஜூலியின் கதாபாத்திரம் குறித்த ஒரு ருசிகர தகவல் வெளியாகியுள்ளது. 

படத்திலும் அவர் பெயர் ஜூலியானாதானாம். இந்தப் படத்தில் சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட புரட்சிப் பெண்ணாக நடிக்கிறாராம். மேலும் படத்தை பற்றிய அதிகார பூர்வ அறிவிப்பு பொங்கலன்று வெளியாகும் என ஜூலி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.