julie acting movie name announced

ஜல்லிக் கட்டு போராட்டத்தால் அனைவராலும் அறியப்பட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம், பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து பிரபலமானவர் ஜூலி. 

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு, ஆரம்பத்தில் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்றவர், தற்போது புரட்சியை மையப்படுத்தி எடுக்கப்படும் படத்தில் கதாநாயகியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

ஏற்கனவே இந்தப் படம் குறித்து அவ்வப் போது சில தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் பெயர் 'உத்தமி' என்று வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தப் பெயரைப் பார்த்து ஏற்கனவே ஜூலி மேல் சற்று கோபமாக உள்ளவர்கள் செம ஷாக்கில் உள்ளனர். யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை என ஜூலி அதனைக் காதில் வாங்காமல் போவது தான் இவரின் வெற்றியின் ரகசியம் போல....