பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் ஒற்றுமையை கையாளும் விதத்தில் அவர்களுக்கு சவாலான ஒரு சில டாஸ்க் கொடுக்கப்படுகிறது.

அந்த வகையில் இந்த வாரம் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க் மிகவும் வித்தியாசமானது தான். அதாவது இவர்கள் சமையல் செய்ய, பாத்ரூம் செல்ல, மற்றும் ரூமில் பகல் நேரத்தில் ஓய்வெடுக்க வெளியில் யாரவது சைக்கிளிங் செய்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று விதி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த விதியை மீறினால் அவர்களுக்கு, கொடுக்கப்படும் லக்சூரி பட்ஜெட் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. 

தற்போது இப்படி ஒரு டாஸ்கை கொடுத்துள்ளதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இப்படி ஒரு டாஸ்க் வைத்தவரை திட்டும் விதத்தில் எட்டி உதைப்பேன் எட்டி உதைப்பேன்... சைக்கிளிங் செய்ய சொன்னால் எட்டி உதைப்பேன், மண்டை காயுது மண்டை காயுது மூடு மாறின மண்டை காயுது... கொலை பண்ணுவ, கொலை பண்ணுவ எவிட் பண்ணுனா கொலை பண்ணுவேன் என்று  ரைசாவிற்கு ஒரு பாடல் கற்றுக்கொடுத்துள்ளார் ஜூலி.