MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • டைவர்ஸுக்கு வாய்ப்பில்ல ராஜா... ரோகிணியின் ராஜ தந்திரத்தால் வசமாக சிக்கிய மனோஜ் - சிறகடிக்க ஆசை அப்டேட்

டைவர்ஸுக்கு வாய்ப்பில்ல ராஜா... ரோகிணியின் ராஜ தந்திரத்தால் வசமாக சிக்கிய மனோஜ் - சிறகடிக்க ஆசை அப்டேட்

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜை தன்னிடம் வந்து பேச வைப்பதற்காக ரோகிணி போட்ட மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 06 2026, 09:25 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Siragadikka Aasai Serial Today Episode
Image Credit : jiohotstar

Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி, ஆள் ஒருவரை செட் பண்ணி மனோஜின் மொட்டை நண்பன் சந்தோஷுக்கு போன் போட்டு, தான் வேறு ஒரு நபருடன் தினசரி பார்க்கில் பேசிக் கொண்டிருப்பதாக சொல்கிறார். இதை சந்தோஷ் மனோஜிடம் சொல்ல, அவரோ இதை நேரில் பார்க்காமல் உறுதி செய்யக் கூடாது என சொல்லி சந்தோஷ் உடன் அந்த பார்க்கிற்கு செல்கிறார். மறுபுறம் சீதா அழுதுகொண்டே தன்னுடைய அம்மா வீட்டிற்கு வந்திருக்கிறார். அவர் அடிவாங்கி வந்திருப்பதை அறிந்த மீனா என்ன ஆச்சு என விசாரிக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

25
அருண் சீதாவை அடித்தது ஏன்?
Image Credit : jiohotstar

அருண் சீதாவை அடித்தது ஏன்?

சீதா என்ன நடந்தது என்பதை மீனாவிடம் சொல்கிறார். முத்து மேல் இருந்த கோபத்தில் அருண் சீதாவை போட்டு அடித்திருக்கிறார். அதனால் தான் சீதாவின் கன்னமெல்லாம் வீங்கி இருக்கிறது. இந்த விஷயத்தை மீனாவிடம் மட்டும் சொன்ன சீதா, இதை யாருக்கும் சொல்ல வேண்டாம் என கூறுகிறார். குறிப்பாக மாமாகிட்ட சொல்லிடாத, அவர் கோபத்தில் மீண்டும் பிரச்சனை பண்ணிடுவார். அம்மாகிட்டையும் சொல்லிடாத என கூறுகிறார் சீதா. இதையடுத்து மீனா, சீதாவுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார்.

Related Articles

Related image1
ரோகிணியின் திருவிளையாடல் ஆரம்பம்... சீதாவை அடிச்சு துரத்திய அருண் - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Related image2
மனோஜை மடக்க ரோகிணி போட்ட மாஸ்டர் பிளான்... முத்துவிடம் மன்னிப்பு கேட்ட ரவி - சிறகடிக்க ஆசை அப்டேட்
35
ரோகிணியை வேவு பார்க்கும் மனோஜ்
Image Credit : jiohotstar

ரோகிணியை வேவு பார்க்கும் மனோஜ்

மறுபுறம் மனோஜ், ரோகிணியை வேவு பார்க்க பார்க்கிற்கு செல்கிறார். சந்தோஷும் உடன் செல்கிறார். அங்கு போய் இருவரும் ஒளிந்திருந்து ரோகிணியை வாட்ச் பண்ணுகிறார்கள். இவர்கள் இருவரின் நடவடிக்கையும் சந்தேகமாக இருப்பதை உணர்ந்த அந்த பார்க்கின் வாட்ச்மேன். இவர்கள் இருவரும் ரோகிணியை தப்பான கண்ணோட்டத்தில் பார்ப்பதாக நினைத்து, அங்கு வந்திருந்தவர்கள் உடன் சென்று மனோஜை ரவுண்டு கட்டி அடிக்கிறார்கள். அவர்கள் அடிப்பதை பார்த்ததும் சந்தோஷ் அங்கிருந்து எஸ்கேப் ஆகி சென்றுவிடுகிறார். மனோஜ் மட்டும் அவர்களிடம் வசமாக சிக்கிக் கொள்கிறார்.

45
மனோஜால் ரோகிணிக்கு சிக்கிய ஆதாரம்
Image Credit : jiohotstar

மனோஜால் ரோகிணிக்கு சிக்கிய ஆதாரம்

தன்னுடைய பிளான் படி அனைத்தும் நடப்பதால் குஷியான ரோகிணி, சத்தம் கேட்டு ஓடிவந்து ஏன் இவரை அடிக்குறீங்க என கேட்கிறார். அங்கிருந்தவர்கள், இவன் உங்களை தவறான கண்ணோட்டத்தில் பார்த்ததாக சொல்கிறார்கள். உடனே இவ என்னோட பொண்டாட்டி தான் நான் ஒன்னும் இவளை தப்பா பார்க்கல என சொல்கிறார் மனோஜ். தவளை தன் வாயாலேயே கெடும் என்பது போல் மனோஜும் தன் வாயால் ரோகிணியை பொண்டாட்டி என சொல்லி உள்ளதால், அதை ரோகிணி வீடியோ எடுத்து ஒரு ஆதாரமாக டைவர்ஸ் கேஸில் சமர்ப்பிக்க வாய்ப்பு இருக்கிறது.

55
சாட்சியாக மாறும் வித்யா
Image Credit : jiohotstar

சாட்சியாக மாறும் வித்யா

அருண் வீட்டிற்கு செல்லும் மீனா, அவருக்கு அட்வைஸ் பண்ணுகிறார். என் தங்கச்சி உங்களை நம்பிதான வந்தா, எங்களையெல்லாம் மீறி நீதான் வேணும்னு வந்தா, நீங்க அவளையே இப்படி போட்டு அடிச்சீங்கனா என்ன அர்த்தம் என கேட்கிறார். இவ்வளவு அட்வைஸ் பண்ணியும் அருண் திருந்தவில்லை. பின்னர் வீட்டில் முத்து, அண்ணாமலை, விஜயா, மனோஜ் ஆகியோர் டைவர்ஸ் கேஸ் பற்றி ஆலோசிக்கிறார்கள். ரோகிணியின் தோழி வித்யாவையும் நாம் சாட்சியாக அழைத்துக் கொள்ளலாம் என திட்டம் போடுகிறார்கள். இதையடுத்து என்ன நடக்கப்போகிறாது என்பதை வெயிட் பண்ணி பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை

Latest Videos
Recommended Stories
Recommended image1
பாண்டியன் - வானதி காதலில் புது ட்விஸ்ட்... நிலாவை பழிவாங்கும் ராகவ் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Recommended image2
Pandian stores 2: பாக்கியத்தின் கொடூர முகம் இதுதான்! சென்னைக்கு சென்ற கூலிப்படை?
Recommended image3
சீரியல் நடிகை வாஹினி மரணம்... கேன்சர் சிகிச்சைக்கு பணமின்றி உயிரிழந்த சோகம்
Related Stories
Recommended image1
ரோகிணியின் திருவிளையாடல் ஆரம்பம்... சீதாவை அடிச்சு துரத்திய அருண் - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Recommended image2
மனோஜை மடக்க ரோகிணி போட்ட மாஸ்டர் பிளான்... முத்துவிடம் மன்னிப்பு கேட்ட ரவி - சிறகடிக்க ஆசை அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved