MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • ரோகிணியின் திருவிளையாடல் ஆரம்பம்... சீதாவை அடிச்சு துரத்திய அருண் - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

ரோகிணியின் திருவிளையாடல் ஆரம்பம்... சீதாவை அடிச்சு துரத்திய அருண் - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜை தன் பக்கம் இழுக்க, ரோகிணி தன்னுடைய தில்லாலங்கடி வேலைகளை ஆரம்பித்து இருக்கிறார். இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 05 2026, 10:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Siragadikka Aasai Serial Today Episode
Image Credit : jiohotstar

Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் செல்வத்தை ஜாமினில் எடுப்பதற்கான ஏற்பாடுகளை எல்லாம் முத்து செய்து வருகிறார். அதே நேரத்தில் நீத்துவின் ரெஸ்டாரண்டை முத்து கொளுத்தவில்லை என்கிற உண்மை அறிந்த ரவி, வீட்டுக்கு வந்ததும் முத்துவை கட்டிப்பிடித்து மன்னிப்பு கேட்டிருக்கிறார். மறுபுறம் ரோகிணி, மனோஜை தன்னுடைய வசம் இழுக்க அவரிடம் போட்டு வழிந்து வழிந்து பேசுகிறார். இதனால் குழம்பிப் போகும் மனோஜ் என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடிப்போய் இருக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
சரக்கடிக்கும் முத்து, ரவி, மனோஜ்
Image Credit : jiohotstar

சரக்கடிக்கும் முத்து, ரவி, மனோஜ்

முத்துவிடம் ரவி மன்னிப்பு கேட்ட போது ரவியின் பைக்குள் பாட்டில் சவுண்டு கேட்கிறது. இதை நோட் பண்ணிய மீனா, ரவி சரக்கு தான் வாங்கி வந்திருக்கிறார் என்பதை கண்டுபிடித்துவிடுகிறார். சிறிது நேரத்தில் மனோஜும் அங்கு வந்துவிடுகிறார். அவர் முத்துவை, வா நம்ம தனியா போய் பேசலாம் என அழைக்கிறார். குடிக்க தான் கூப்பிடுகிறார் என்பது மீனாவுக்கு புரிகிறது. இதையடுத்து முத்து, மீனாவிடம் கெஞ்சி கூத்தாடி, கிளம்பிச் செல்கிறார். அதன்பின்னர் மூவரும் சேர்ந்து மாடியில் சரக்கடிக்க ஆரம்பிக்கிறார்கள். அப்போது மனோஜ் ஒருபக்கம் தன்னுடைய சோகக் கதையை சொல்ல, மறுபக்கம் ரவி தன்னுடைய கதையை சொல்லி புலம்புகிறார்.

Related Articles

Related image1
அசிங்கப்பட்ட முத்து... ரவியிடம் கையும் களவுமாக சிக்கிய ஸ்ருதியின் அப்பா - சிறகடிக்க ஆசை அப்டேட்
Related image2
மனோஜை மடக்க ரோகிணி போட்ட மாஸ்டர் பிளான்... முத்துவிடம் மன்னிப்பு கேட்ட ரவி - சிறகடிக்க ஆசை அப்டேட்
35
புலம்பும் ரவி... ஆறுதல் சொல்லும் முத்து
Image Credit : jiohotstar

புலம்பும் ரவி... ஆறுதல் சொல்லும் முத்து

இந்த பிரச்சனையை எப்படி தான் முடிக்குறதுனு தெரியலையே என இருவரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக மனோஜ், ரோகிணி தன்னிடம் இப்போ பேசுவதெல்லாம் தப்பு தப்பா இருக்கு என கூறுகிறார். அதேபோல் ரவியும், ஸ்ருதியோட அப்பா என்ன இப்படி தேவையில்லாத வேலையை பார்த்துட்டு பெரிய பிரச்சனையை உண்டாக்கிட்டார், என்ன செய்வதென்றே தெரியவில்லை என ரவி புலம்புகிறார். இதையடுத்து முத்து இருவருக்கும் ஆறுதல் சொல்லுகிறார். இந்த பிரச்சனையெல்லாம் விரைவில் சரியாகிடும் என கூறுகிறார்.

45
ரோகிணியின் தில்லாலங்கடி வேலை
Image Credit : jiohotstar

ரோகிணியின் தில்லாலங்கடி வேலை

மறுநாள், ரோகிணி ஒரு பிளான் போடுகிறார். அவர் ஒரு பார்க்கில் போய் அமர்ந்துகொண்டு, அங்கு ஒரு ஆளை செட் பண்ணி, மனோஜுடைய மொட்டை ஃபிரண்டு சந்தோஷுக்கு போன் போட்டு, உங்க பாஸோட பொண்டாட்டி டெய்லியும் இங்க பார்க்ல ஒருத்தன மீட் பண்ணிகிட்டு இருக்காங்க. எனக்கு ஏதோ தப்பா தெரியுதுனு சொல்லச் சொல்கிறார். அந்த நபரும் சந்தோஷிடம் இதையெல்லாம் சொல்லிவிடுகிறார். பின்னர் சந்தோஷ் இந்த விஷயத்தை மனோஜிடம் சொல்கிறார். அதன்பின்னர் மனோஜ், தன்னுடைய மொட்டை ஃபிரண்டு, ஜீவா ஆகியோருடன் கலந்துரையாடுகிறார்.

55
கண்ணீருடன் சீதா
Image Credit : jiohotstar

கண்ணீருடன் சீதா

அவ யார்கிட்ட பேசுனா உங்களுக்கென்ன நீங்க தான் அவளை டைவர்ஸ் பண்ண போறீங்கள்ல என சந்தோஷ் சொன்னதோடு, அவளைப் போலவே நீங்களும் ஒரு பொண்ணை பார்த்து பேசி கரெக்ட் பண்ணுங்கனு சொல்லுகிறார். எதையும் நேரில் பார்க்காமல் முடிவெடுக்கக்கூடாது என சொல்லும் மனோஜ், ரோகிணியை நோட்டமிட அந்த பார்க்கிற்கு நேரில் செல்கிறார். மறுபுறம் மீனா தன்னுடைய அம்மாவீட்டிற்கு செல்கிறார். அங்கு சீதா அழுதுகொண்டே வருகிறார். அடிபட்டு, முகமெல்லாம் வீங்கிய நிலையில், வந்திருக்கிறார் சீதா. அவருக்கு ஏதோ நடந்திருக்கிறது. அது என்ன என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ethirneechal Thodargiradhu : உனக்கு 2 பொண்டாட்டி கேக்குதாடா? தர்ஷனை அடிவெளுத்த ஈஸ்வரி - ஜனனிக்கு தெரியவரும் உண்மை
Recommended image2
Siragadikka Aasai : ரோகிணியை மாட்டிவிட்ட கிரிஷ்... மீனா வீட்டைவிட்டு வெளியேற முடிவெடுத்த விஜயா...!
Recommended image3
Top 10 Serial : அதிக TRP ரேட்டிங்கை வாரிசுருட்டிய டாப் 10 தமிழ் சீரியல்கள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ
Related Stories
Recommended image1
அசிங்கப்பட்ட முத்து... ரவியிடம் கையும் களவுமாக சிக்கிய ஸ்ருதியின் அப்பா - சிறகடிக்க ஆசை அப்டேட்
Recommended image2
மனோஜை மடக்க ரோகிணி போட்ட மாஸ்டர் பிளான்... முத்துவிடம் மன்னிப்பு கேட்ட ரவி - சிறகடிக்க ஆசை அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved