ஜூலி நேற்று ஒரு நிமிடம் அனைவரையுமே மிகவும் பரபரப்பாக்கி விட்டார். இவர் அழுது துடித்ததை பார்த்த பலர், ஜூலிக்கு என்ன ஆனது என்று பதறிவிட்டனர்.

காரணத்தை அறிந்த பிறகு தான் தெரியவந்தது ஜூலி வேண்டும் என்றே ஒரு நாடகம் போட்டார் என்பது. தான் கிழே விழுந்ததால் வயிற்று வலி வந்துவிட்டது என துடித்த இவர் ஏன் கீழே விழுந்த போது வலி இருந்ததை வெளிப்படுத்திக்கொள்ளவில்லை என பலர் மனதிலும் கேள்வி எழும்பியுள்ளது.

மேலும் கபடி ஆடும் போது நன்றாக குதித்து சந்தோஷமாக நடனமாடிய இவர்... இவரை சாப்பிட கூப்பிடும் வரை நன்றாக இருந்து விட்டு ஏன் உள்ளே வந்து இப்படி வலி என துடிக்க வேண்டும். 

இதையெல்லாம் கூட்டி கழித்து பார்த்தல்... உங்களுக்கே தெரியும் இது வேண்டும் என்றே அனைவர் மத்தியிலும் தனக்கு வயிறு வலிப்பதாக கூறி அழுது ஆர்ப்பாட்டம் செய்துள்ளார் என்பது.  பொறுத்திருந்து பாப்போம் இன்னும் என்ன நாடகமெல்லாம் ஜூலி ஆடுவார் என்று...