Varuthapadatha Valibar Sangam 2 Movie Update : வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 களமிறங்க போகிறது என்று இயக்குனர் பொன்ராம் கூறியுள்ளார்

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இயக்குநர் பொன்ராம் இயக்கிய இந்தப் படம் முழுக்க முழுக்க காமெடி கதைக்களத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு பிடித்த படமாக அமைந்தது. தேனி கிராமத்தில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது வாலிபர் பசங்களுக்கு என்றே எடுக்கப்பட்டது போன்று இருந்தது. ஒவ்வொரு திருவிழாவும் இந்த படத்தை போடாத நாட்களை இருந்திருக்காது. ஒரு கிராமத்தில் ஒரு இளைஞருக்கு நடக்கும் நிகழ்வு தான் இந்த படமாக்கப்பட்டது ஒவ்வொரு கிராம இளைஞருக்கும் இந்த படம் தனக்கென்று எடுக்கப்பட்டது போல் நினைத்துக் கொண்டனர் இந்த படம் ரசிகர் மத்தியில் உள்ளத்தையே தொட்டுவிட்டது என்று கூட கூறலாம்.

சிவகார்த்திகேயன் சூரி காம்போ:

சிவகார்த்திகேயன் மற்றும் சூரி இருவரும் இந்த படத்தில் செய்யாத சேட்டைகளை இல்லை என்று கூறலாம் அவ்வளவு அருமையாகவும் இரண்டு வாலிப பசங்கள் கிராமத்தில் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை அப்படியே அச்சுபிசறாமல் படமாக்கப்பட்டு இருக்கும். இந்த படம் வெளியானதற்கு பிறகு இவர்களின் காம்போ வேற லெவலில் ஹிட் அடித்தது. இவர்கள் செய்யும் காமெடிக்கு அளவே இல்லாமல் தான் இருக்கும் ஒவ்வொரு டயலாக்கும் இவர்களுக்கு என்றே இதில் எழுதப்பட்டிருக்கும் இந்த படத்தில் வரும் ஒவ்வொரு டயலாக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. நீங்க கரகத்தை தூக்குங்க தூக்காம போங்க திருவிழாவை நடத்துங்க நடத்தாம போங்க ஆனா எங்களுக்கு ஆடலும் பாடலும் நிகழ்ச்சி போட்டே ஆக வேண்டும் என்று இவர்கள் கூடும் டயலாக் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய ஹிட் அடித்ததே என்று கூறலாம். 

ஊர் புறங்களில் திருவிழாவில் நடைபெறும் அதில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி இடம்பெறும் அந்த கான்செப்ட்டை பொன்றாம் அப்படியே தன் படத்திலும் வைத்திருப்பார். அதைப் பார்ப்பதற்காகவே கிராம இளைஞர்கள் செல்வார்கள் என்பதை அப்படியே படமாக்கி வைப்பார் பொன்ராம். ஸ்ரீதிவ்யா இந்த படத்தில் ஒரு பள்ளி மாணவியாக இடம்பெற்று இருப்பார் இவரது நடிப்பு இந்த படத்தில் மிகப் பெரிய வெற்றியைத் தந்தது அது மட்டுமல்லாமல் ஸ்ரீதிவ்யாவுக்கு தந்தையாக சத்தியராஜ் நடித்திருப்பார். பிந்து மாதவி டீச்சராக நடித்திருப்பார் அவர் நடிப்பு கூட இந்த படத்தில் மிகச் சிறப்பாகவே இடம்பெற்றிருக்கும். இந்த படம் ரசிகர் மத்தியில் பெரும் வெற்றியைப் பெற்று நீங்காத இடத்தை பெற்றிருந்தது. இசையமைப்பாளராக இந்த படத்தில் இமான் இசையமைத்திருப்பார் இதில் வரும் ஒவ்வொரு பாட்டும் பெரும் ஹிட் அடித்தது என்று கூறலாம் அதில் "ஊதா கலரு ரிப்பன்"என்னும் பாடல் சக்கபோடு போட்டது என்றே கூறலாம்.

கொம்பு சீவி:

கொம்பு சீவி பொன்ராமால் இயக்கி கேப்டனின் மகன் சண்முக பாண்டியன் நடிக்கப்பட்ட இந்த படம் போதுமான அளவு வெற்றி பெறாத காரணத்தினால் சற்று மனம் உடைந்தார் பொன்ராம். தேனி ஒரு திரையரங்கில் படம் பார்த்து பிறகு பேட்டி கொடுக்கும்பொழுது பத்திரிக்கையாளர் ஒருவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 எடுப்பீர்களா என்று கேட்க கண்டிப்பாக எடுப்பேன் அது என் கனவு என்று பேட்டியில் கூறினார். சீக்கிரமாக அந்த படத்தை எடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2:

இந்த பார்ட் டூவிழும் இதே மாதிரியான தேனி கிராமத்து வாழ்க்கையை படமாக்கி இருப்பாரா ஒன்றாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே மாதிரியான காமெடி காதல் செண்டிமெண்ட் இருக்குமா என்று ரசிகர் மத்தியில் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். சிவகார்த்திகேயன் சூரி, ஸ்ரீதிவ்யா ஆகியோர் இதில் பெற்றிருப்பார்களா என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுப்பப்படுகிறது