மறைந்த தெலுங்கு நடிகரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவ் நினைவிடத்தில் அவரது பேரன் ஜூனியர் என்.டி.ஆர். உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்
மறைந்த தெலுங்கு நடிகரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவின் 101ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, மறைந்த தாத்தாவின் நினைவிடமான என்டிஆர் காட்டிற்கு சென்ற தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் அவரது நினைனிடத்தில் அஞ்சலி செலுத்தினார். ஜூனியர் என்.டி.ஆருடன் அவரது ஒன்றுவிட்ட சகோதரர் நந்தமுரி கல்யாண் ராம் உடன் இருந்தார்.
என்.டி.ராமாராவ் நினைவிடத்தில் அவரது பேரன் ஜூனியர் என்.டி.ஆர். அஞ்சலி செலுத்திய புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், ஜூனியர் என்டிஆர் நினைவிடத்தில் தரையில் அமர்ந்து மௌனம் கடைப்பிடிப்பதைக் காணலாம். இந்த நிகழ்வில் என்.டி.ஆர். மகனும் நடிகருமான நந்தமுரி பாலகிருஷ்ணா உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் பலரும் கலந்து கொண்டனர்.
மறைந்த என்.டி.ராமாராவ் நடிகர் திரைப்பட தயாரிப்பாளர் அரசியல்வாதி என பல துறைகளில் சாதனை படைத்தவர். ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக 3 முறை பதவி வகித்துள்ளார். சுமார் 300 திரைப்படங்களில் நடித்துள்ள என்.டி.ராமாராவ், மூன்று தேசிய விருதுகளை வென்றுள்ளார். கடந்த 1996ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் என்.டி.ராமாராவ் காலமானார்.
