jothika next controvercy word
கெட்ட வார்த்தை
பாலா இயக்கத்தில் ஜோதிகா ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்து வரும் படம் நாச்சியார்.
இந்த படத்தின் டீசர் வெளியாகி மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.காரணம் இதில் ஜோதிகா பேசிய வசனம்தான்.ஜோதிகா அதில் கெட்ட வார்த்தையை பேசியிருப்பார்.இது விவாதத்துள்ளாகியது.மேலும் ஜோதிகாவை இப்படியெல்லாம் பேச வேண்டாம் என்று ரசிகர்கள் விமர்சித்தனர்.
பெண் பேசுவதால் விவாதம்
இதுபற்றி விளக்கம் அளித்த ஜோதிகா நாச்சியார் டீசரில் நான் பேசியது கெட்ட வார்த்தைத்தான்.அதை நான் மறுக்கவில்லை. ஆனால் அந்த வார்த்தையை நிறைய படங்களில் நிறைய ஆண்கள் பேசியிருக்கிறார்கள். ஒரு பெண் முதல்முறையாக அப்படி பேசுவதால் அது விவாத பொருளாக மாறியிருக்கிறது. படத்தில் அந்த கதாபாத்திரத்துக்கு ஏற்ற வசனம் அது. இன்னும் கொஞ்சம் டயலாக் சேர்த்து பேசணும்.நான் கொஞ்சம் குறைத்து பேசியிருக்கிறேன்.படத்தில் குறிப்பிட்ட சூழலில் அந்த வசனம் வரும் போது அதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன் என்று கூறியிருந்தார்.
கோவில், குப்பை மேடு
இந்நிலையில் இப்படத்தின் புரோமோ வீடியோ நேற்று வெளியானது. அதில் ஒரு காட்சியில் எங்களுக்கு கோவிலும், குப்பை மேடும் ஒன்னுதான் என கூறும் காட்சி இடம்பெற்றுள்ளது. அதேபோல் அனைத்து மதங்களின் பாடல்களும் ஒலிக்கின்றன.
எனவே இந்த காட்சிக்கு கண்டிப்பாக மதம் சார்ந்த பிரச்சினைகள் வரும்.மதவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
