நடிகர் கார்த்தி முதல் முறையாக தன்னுடைய அண்ணி, ஜோதிகாவுக்கு தம்பியாக நடித்துள்ள திரைப்படம் ’தம்பி’. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. 

இந்த ட்ரைலரில், ஜோதிகாவின் தம்பியாக நடித்துள்ளார் கார்த்தி ஒரு ஜெகஜால கில்லாடி, பொய் சொல்லுவது, நடிப்பது எல்லாம் இவருக்கு அத்துப்படி. நடிகர் சத்யராஜ் கார்த்தி - ஜோதிகாவின் அப்பாவாகவும் ஒரு அரசியல் வாதியாகவும் நடித்துள்ளார். நடிகை சீதா அம்மா வேடத்திலும், பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி பாட்டி வேடத்தில் நடித்துள்ளார்.

கார்த்திக்கு ஜோடியாக நடிகை நிகிலா விமல் நடித்துள்ளார். காதல், காமெடி, ஆக்ஷன், செண்டிமெண்ட் என அனைத்து அம்சங்களுக்கும் குறைவில்லாமல் இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ஜீத்து ஜோசப் என்பது ட்ரைலரை பார்த்தாலே தெரிகிறது.

இப்படம் கிருஸ்துமஸ் விருந்தாக, டிசம்பர் 20 ஆம் தேதி உலக முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தற்போது வெளியாகியுள்ள இந்த படத்தின் ட்ரைலர் இதோ...