Joint children in government school says dhamu

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டும் என்று, நடிகர் தாமு வலியுறுத்தியுள்ளார்.

இன்றையச் சூழலில் எல்லாரும் தங்களது குழந்தைகளை உயர்தர தனியார் மற்றும் மத்திய அரசின் கல்வித் திட்டத்தின்கீழ் இயங்கும் பள்ளிகளில் படிக்க வைக்கவே விரும்புகின்றனர். அங்கு தான் தரம் நன்றாக இருக்கிறது. அங்குதான் இங்கிலீஷ்ல புலுயன்டா பேச முடியும் என்று காரணங்கள் அடுக்கிக் கொண்டே போவார்கள். பிறகு, பணம் சாம்பாதிக்க படாத பாடுபடுவர்.

அரசுப் பள்ளிகளில் படித்தும் பெரிய ஆளாக வந்தவர்கள் யாரும் இவர்களது கண்களுக்கு புப்லப்படுவது இல்லை. இதனால், அரசுப் பள்ளிகளை நாடுவோர் மிகக் குறைவாகவே உள்ளனர். அரசுப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைய தொடங்கிவிட்டது.

இதையடுத்து, ஆசிரியர் பணியிடங்களை குறைப்பதில் தமிழக அரசு, கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், அரசுப் பள்ளிகளை ஆதரிக்கும் வகையில், நடிகர் தாமு கூறியது: “பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் படிக்க வைக்க முன்வர வேண்டும். அரசுப் பள்ளிகளை நாம் ஊக்குவிப்பது மிக அவசியம்” என்றும் தெரிவித்துள்ளார்.