John G. Avildsen Rocky and Karate Kid Director Passes Away at 81
சில்வஸ்டர் ஸ்டாலோன் நடித்த ராக்கி, தி கராத்தே கிட் உள்ளிட்ட பல்வேறு ஹாலிவுட் படங்களை இயக்கிய பழம்பெரும் இயக்குநர் ஜான் ஜி அவில்டுசன் உடல் நலக்குறைவால் காலாமானார்.
1935 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தவர் அவில்டுசன்.சிறுவயது முதலே திரைப்படத்துறை மீது பெரும் காதல் கொண்டிருந்த அவில்டுசன் தன் பால்ய கால வயதில் சக நண்பர்களிடம் கற்பனையாக கதைகளைக் கூறி ஆச்சரியமளிப்பவர். கல்லூரி படிப்புக்கு பின்னர் அர்தூர் பென்,பிரிமிங்கர் உள்ளிட்டோர்களிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து திரைப்படத்தின் நீள அகலங்களை வெகு விரைவிலேயே கற்றுக் கொண்டார்.
குறைந்த முதலீட்டைக் கொண்டு 1970 ஆம் ஆண்டு இவர் இயக்கிய Joe திரைப்படம் வசூலில் தாறுமாறாக ஹிட்டடித்தது. இதனைத் தொடர்ந்து இவரது படைப்பால் உருவான Save The Tiger திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு முன்று முறை பரிந்துரைக்கப்பட்டது.

1970 களில் தொடங்கி 1975 வரை இவர் இயக்கிய படங்கள் ஆகப் பெரிய சாதனைகளை படைக்கவில்லை. இருப்பினும் மனம் தளராத அவில்டுசன், சில்வெஸ்டர் ஸ்டாலோனை கதாநாயகனாக் கொண்டு இயக்கிய ராக்கி திரைப்படம் அமெரிக்கா மட்டுமின்றி உலக அளவிலும் மகத்தான வெற்றியை வாரிக் குவித்தது. அமெரிக்கா முதல் அன்டார்டிக்கா வரை ராக்கி திரைப்படம் பெரிதாகப் பேசப்பட்டது. இன்றளவும் பேசப்படுகிறது.
John G. Avildsen told some great American stories in films such as "Save the Tiger," "Rocky," "Karate Kid," "Lean on Me..." Rest In Peace.
— Richard Roeper (@richardroeper) June 16, 2017
ஆஸ்கர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை ராக்கி வென்றதால் உச்சத்திற்குச் சென்றார் இயக்குநர் அவில்டுசன். வயதோதிக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும் வில் ஸ்மித் நடித்த தி கராத்தே கிட் படத்தையும் இயக்கி இளம் இயக்குநர்களுக்கு ஆதர்சன புருசனாக திகழ்ந்த அவில்டுசன் உடல் நலக்குறைவால் நேற்று காலாமானார்.இவரது இறுதிச் சடங்கு இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
