jimikkikammal famous music director join jai moive

நடிகர் ஜெய் மற்றும் அஞ்சலி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த பலூன் திரைப்படம், வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றாலும். இந்த படத்தின் படப்பிடிப்பில் நடிகர் ஜெய் குடித்து விட்டு படப்பிடிப்பில் சரியாக கலந்துக்கொள்ளாமல் இருந்ததாகவும், இதனால் இந்த படத்தின் இயக்குனர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை வரை சென்றதாக பல புகார்கள் எழுந்தது.

இந்நிலையில் இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் பார்ட்டி, மற்றும் சுந்தர் சி இயக்கத்தில் கலகலப்பு 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார் இப்படங்கள் விரைவில் வெளியாக உள்ளது.

மேலும் தற்போது ஜெய் 'மாங்கல்யம் தந்துனானே' என்கிற படத்தில் கமிட் ஆகியுள்ளார். ஷியாம் மற்றும் பிரவீன் இயக்கும் இப்படத்தில் டெல்னா டேவிஸ் நாயகியாக நடிக்கவுள்ளார்.

இந்த படத்தில் இசையமைக்க ஷான் ரஹ்மான் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவர் சமீபத்தில் சமூக வலைதளங்களில் இளைஞர்களிடம் வைரலாகிய ஜிமிக்கி கம்மல் பாடலை இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.