மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்த "வெளிப்படிந்தே  புஸ்தகம்" திரைப்படத்தில் வினீத் ஸ்ரீனிவாசன் மற்றும் ரஞ்சித் உன்னி பாடிய ஜிமிக்கி கம்மல் பாடல் மிகவும் பிரபலமாகியுள்ளது.

அந்த படத்தை விட, ஓணம் பண்டிகையின் போது கேரளாவை சேர்ந்த பெண்கள் ஒன்று கூடி நடனமாடியது தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது.

ஏற்கனவே இந்த ஜிமிக்கி கம்மல் பாடலை ஒரு சிலர் ட்ரெண்ட் செய்து வருவது குறித்து 'உறியடி விஜயகுமார்' நீட் தேர்வை எதிர்த்தும் மாணவர்களின் எதிர்காலம் கருதியும் போராடி வரும் நிலையில் இது போன்ற பாடல்களை ட்ரெண்ட் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
 
மேலும் தற்போது அந்த பாடலில்  நடனம் ஆடி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்த ஷெர்லின் தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில், "உங்கள் அனைவரின் ஆதரவுக்கும் நன்றி, அதுவும் தமிழ் மக்கள். ஆனால் நீங்கள் அனிதா பிரச்சனைக்கு ஆதரவு தர வேண்டும் அது தான் முக்கியம்... என கூறியுள்ளார்.