இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா நடிப்பில் வெளியாகி கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ஜிகிர்தண்டா.  இந்த படத்தில் வில்லனாக நடித்த நடிகர் பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருதையும் இப்படம் பெற்றுத் தந்தது.

இந்த படத்தில் நடிகை லட்சுமிமேனன் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.  பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் தயாரிப்பில் இந்தப் படத்தை அபிஷேக் இயக்கவுள்ளார்.

மேலும் இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.  இப்படத்தில் சித்தார்த் நடித்த ரோலில் பர்ஹான் அக்தர் நடிக்கவுள்ளதாகவும், ஆனால் தற்போது ஒரு சில காரணங்களால் இவர் வெளியேறியதை தொடர்ந்து கார்த்திக் ஆர்யன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் பாபி சிம்ஹா ரோலில் சஞ்சய் தத் நடிக்க உள்ளதாகவும்,    லக்ஷ்மி மேனன் நடித்த வேடத்தில் நடிப்பதற்காக பிரபல நடிகை தமன்னாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.