jigirthanda hindi remake

இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா நடித்து வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் ஜிகிர்தண்டா. இந்தத் திரைப்படம் நடிகர் பாபி சிம்ஹாவிற்கு தேசிய விருதை பெற்றுக்கொடுத்தது.

தற்போது இந்தப் படம் ஹிந்தியில் ரீமேக் ஆகவுள்ளது. இதில் நடிகர் சித்தார்த் நடித்த வேடத்தில் ஃபர்ஹான் அக்தர் நடிக்க உள்ளார். பாபி சிம்ஹா நடித்த அசால்ட் சேது வேடத்தில் சஞ்சய் தத் நடிக்க இருக்கிறாராம்.

நிஷிகந்த் கமத் இயக்கவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் 4 ஆம் தேதியில் இருந்து தொடங்கப்படவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.