ஹாரர் திரில்லர் கதைம்சத்துடன் உருவாகியுள்ள ‘ஜென்ம நட்சத்திரம்’ திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

‘ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் நடிகர்கள் 

அமோஹம் ஸ்டுடியோஸ் ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் தயாரிப்பில் கே சுபாஷினி தயாரித்துள்ள திரைப்படம் தான் ‘ஜென்ம நட்சத்திரம்’. இந்த படத்தை ‘ஒரு நொடி’ படத்தை இயக்கிய பி.மணிவண்ணன் இயக்கியுள்ளார். தமன் அக்ஷன், மால்வி மல்ஹோத்ரா, மைத்ரேயா, ரக்ஷா ஷெரின், அருள் கார்த்தி, வேலலாமு மூர்த்தி, தலைவாசல் விஜய், சந்தான பாரதி, காளி வெங்கட், நக்கலைட்ஸ் நிவேதிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

‘ஜென்ம நட்சத்திரம்’ டீசர் வெளியீடு

ஒளிப்பதிவு பணிகளை கே.ஜியும், இசையை சஞ்சய் மாணிக்கமும் மேற்கொண்டுள்ளனர். படத்தொகுப்புப் பணிகளை எஸ். குரு சூர்யாவும், கலை இயக்க பணிகளை எஸ்.ஜே ராம் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர். இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் உலகமெங்கும் வெளியிட இருக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் மற்றும் இறுதி கட்டப்பணிகள் நிறைவடைந்த நிலையில் விரைவில் படம் உலகம் எங்கும் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் படத்தின் டீசரை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

கவனம் பெறும் ‘ஜென்ம நட்சத்திரம்’ டீசர்

பேய்களுக்கும் 666 என்கிற எண்ணிற்கும் மிகுந்த நெருக்கம் உண்டு. அந்த வகையில் படத்தின் அறிவிப்பில் இருந்தே அதன் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் என அனைத்தையும் மாலை 6 மணி, 6 நிமிடங்கள், 6 நொடிக்கு வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசரும் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.