இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஜெயம் ரவி நடித்துள்ள திரைப்படம் 'கோமாளி'. இந்த படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஜெயம் ரவி நடித்துள்ள திரைப்படம் 'கோமாளி'. இந்த படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
தற்போது 'கோமாளி' படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து, போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை ஜெயம் ரவி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது கோமாளி திரைப்படம், சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.
தொடர் விடுமுறை நாட்கள் வருவதால், இந்த படத்தை சுதந்திர தினத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இந்த படத்திற்கு ஜெயம் ரவியின் தனிஒருவன் படத்திற்கு இசையமைத்திருந்த, ஹிப்ஹாப் தமிழா ஆதி இசை அமைத்துள்ளார். ரிச்சர்ட் நாதன் ஒளிப்பதிவில் பிரதீப் ராகவ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.
இதே நாளில், பாகுபலி படத்தை தொடர்ந்து வெளியாக உள்ள 'சாஹோ' படமும் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.