தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நாயகன் என்றால் அது ஜெயம் ரவி என்று சொல்லலாம்  அதுவும் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து தனது மார்க்கெட்டை கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ளார். தனது ஒவ்வொரு படமும் வித்தியாசம் இருக்கவேண்டும் என்று மிகுந்த அக்கறையுடன் படங்களை தேர்ந்துடுத்து நடிக்கும் நடிகர் என்று சொல்லலாம். 

கடந்த படம் போகன் இவருக்கு ஒரு பெரிய வெற்றியாக அமைந்தது. அடுத்து இவர் நடித்து வரும் படம் என்றால் அது வனமகன் இந்த படத்தில் காட்டு பழங்குடியினராக நடிக்கிறார். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் இவருக்கு வசனமே கிடையாது, என்பது மேலும் சிறப்பு மட்டும் இல்லை இவரின் நடிப்புக்கு ஒரு சவால் என்று தான் சொல்லணும்.

‘போகன்’ படத்தைத் தொடர்ந்து மிருதன்  படத்தை இயக்கிய  சக்தி செளந்தரராஜன் இயக்கும் ‘டிக் டிக் டிக்’ மற்றும் விஜய் இயக்கத்தில் ‘வனமகன்’ ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்தி வந்தார் ஜெயம் ரவி.

விஜய் இயக்கத்தில் உருவாகும் ‘வனமகன்’ படத்தில் சாயிஷா சைகல் நாயகியாக நடித்துள்ளார். திரு ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் உள்ள அடர்ந்த காடுகளுக்குள்ளும், தாய்லாந்து மற்றும் சென்னையில் சில முக்கிய காட்சிகளும் படப்பிடிப்பு நடத்தப்பட்டு இருக்கிறது. ‘பேராண்மை’ படத்தைத் தொடர்ந்து இப்படத்திலும் பழங்குடி இனத்தவராக நடித்து வருகிறார் ஜெயம் ரவி.

‘வனமகன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிகட்ட பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்களுக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இப்படத்தை கோடை விடுமுறை வெளியீடாக மே 12-ம் தேதி வெளியிட படக்குழு முடிவு வெளியாகும் என படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால், தற்போது ஒரு வாரம் தள்ளி மே 19ம் தேதி வெளியாகும் என ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.