Iraivan OTT: நயன்தாரா - ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'இறைவன்' OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு!
'தனி ஒருவன்' படத்திற்கு பின்னர், நயன்தாரா மற்றும் ஜெயம் ரவி இணைந்து நடித்த 'இறைவன்' திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான நிலையில், தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி போலீஸ் அதிகாரியாக நடித்து வெளியான திரைப்படம் 'இறைவன்'. 6 மாதத்தில் 12 இளம் பெண்களை கடத்தி, அவர்களின் உடல் உறுப்புகளை கொடூரமாக வெட்டி கொலை செய்யும் சைக்கோ குற்றவாளியை மையமாக வைத்து, த்ரில்லர் ஜர்னரில் இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. கிட்ட தட்ட போர் தொழில், பாணியில் இப்படம் எடுக்கப்பட்டிருந்தாலும்... விறுவிறுப்பை அதிகரிக்க தேவையில்லாத காட்சிகள் சேர்க்க பட்டதால் இப்படம் ரசிகர்களுக்கு சலிப்பு தட்டியது.
அதே போல் நயன்தாராவின் காட்சிகளுக்கும் இப்படத்தில் பெரிதாக ஸ்கோப் இல்லாதது நயன் ரசிகர்களை கடுப்பாகியது. தொடர்ந்து கலவையான விமர்சனங்களை பெற்ற இறைவன் திரைப்படம் போட்ட பணத்தை கூட வசூலிக்காமல் தோல்வியை தழுவியது. இந்த படத்தில் நயன் - ஜெயம் ரவியை தவிர, நரேன், விஜயலட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, பேஷன் ஸ்டுடியோஸ் என்கிற நிறுவனம் இந்த படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்திருந்தது. செப்டெம்பர் 28- ஆம் தேதி வெளியான இந்த படத்தின், டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றிய நிலையில், தற்போது.. இந்த படத்தின் OTT ரிலீஸ் குறித்த தகவலை நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி 'இறைவன்' திரைப்படம் அக்டோபர் 26 ஆம் தேதி, வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை திரையரங்கில் பார்க்க முடியாத ரசிகர்கள் தற்போது ஓடிடியில் பார்க்க தயாராகி உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D