அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா - உமாபதி திருமண நிச்சயதார்த்த எங்க நடக்க போகுது தெரியுமா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!
அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா மற்றும் தம்பி ராமைய்யா மகன் உமாபதிக்கும் விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ள நிலையில், எங்கு நடக்கப்போகிறது என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
Aishwarya and Umapathy Love:
சில மாதங்களுக்கு முன்னர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவும், தம்பி ராமைய்யா மகன் உமாபதியும் காதலித்ததை தொடர்ந்து, இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க இரு வீட்டு பெற்றோரும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதை தொடர்ந்து, தம்பி ராமைய்யாவும் இந்த தகவலை பேட்டி ஒன்றில் உறுதி செய்தார்.
Aishawarya and Umapathy love Story:
மேலும் இவர்கள் இருவருமே சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோ - ஹீரோயினாக இருந்து வரும் நிலையில், இவர்கள் இடையே காதல் மலர்ந்ததும் மிகவும் சுவாரஸ்யமான கதை தான். நடிகர் அர்ஜுன் கடந்த 2021-ம் ஆண்டு, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக நடத்தப்பட்ட 'சர்வைவர்' என்கிற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களமிறங்கி கலக்கினார்.
Lokesh Kanagaraj: 'லியோ' கொண்டாட்டத்தில் நடந்த விபரீதம்! லோகேஷ் கனகராஜ் மருத்துவ மனையில் அனுமதி..?
Both Family Decide to Marriage:
இந்த நிகழ்ச்சியில் உமாபதியும் ஒரு போட்டியாளராக இருந்தார். அந்நிகழ்ச்சி மூலம் தான் உமாபதிக்கும் ஐஸ்வர்யாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இருவருக்கும் மனம் ஒத்து போனதால், நடிகர் அர்ஜுன் சென்னையில் கட்டியுள்ள ஆஞ்சநேயர் கோவிலில் தம்பி ராமையா குடும்பமும், அர்ஜுனின் குடும்பமும் சந்தித்து இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
Thambi Ramaiah About Marriage:
இவர்களின் திருமணத்தை தை மாதம் நடத்த இருவீட்டு குடும்பத்தினரும் முடிவு செய்துள்ள நிலையில், அதற்க்கு முன்பு, இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. குடும்ப சென்டிமென்டின் படி, எந்த இடத்தில் இவர்களின் திருமணம் பேசி முடிவு செய்யப்பட்டதோ... அதே ஆஞ்சிநேயர் கோவிலில் மிகவும் எளிமையாக குடும்ப நண்பர்கள் மத்தியில் இவர்களின் திருமண நிச்சயதார்த்தார்கள் நடைபெற உள்ளதாம்.
Engagement For This Month:
நிச்சயதார்த்தம் எப்போது நடைபெறுகிறது என்பது பற்றி இன்னும் அறிவிக்கப்பட வில்லை என்றாலும், இன்னும் ஒரு வாரத்திற்குள் நடைபெற உள்ளதால்... அதற்கான பணிகள் தற்போது மிகவும் பரபரப்பாக நடந்து வருகிறதாம். இந்த தகவல் வெளியாக இப்போதே ரசிகர்கள் சமூக வலைதளத்தின் மூலம் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D