தனி ஒருவன் படத்திற்கு பின்னர் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா இணைந்து நடிக்கும் 'இறைவன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மாட்டு பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாகி உள்ளது.

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக கடந்த செப்டெம்பர் மாதம் வெளியான, 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில், அருண்மொழி வர்மனாக நடித்து, ராஜ ராஜ சோழனாக ரசிகர்கள் மனதில் குடியேறிய ஜெயம் ரவி, அடுத்தடுத்து நடிக்கும் படங்களில் சம்பளத்தை உயர்த்தியதாக கூறப்பட்ட நிலையில், திரைப்படங்களின் கதைகளிலும், அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்த நிலையில் ஜெயம் ரவியின் தன்னுடைய 29 ஆவது படத்தை, இயக்குனர் அகமது என்பவர் இயக்கத்தில் நடிக்க உள்ள தகவல் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில்... 'தனி ஒருவன்' படத்தின் மாஸ் வெற்றிக்கு பின்னர் மீண்டும் நயன்தாரா ஜெயம் ரவியுடன் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தற்போது இந்த படத்தின், ஃபர்ஸ்ட் லுக்கை... பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது.

'RRR' படம் பார்த்த இரண்டு முறை ஜேம்ஸ் கேமரூன்..! ராஜமௌலி என்ன சொன்னார் தெரியுமா? வைரல் பதிவு!

இதில் ஜெயம் ரவியின் முகமும், முகத்தின் உள்ளே... ஜெயம் ரவி மற்றும் நயன்தாராவின் உருவமும் தெரிவது போல் மிகவும் வித்தியாசமாக உள்ளது. நயன்தாராவும், ஜெயம் ரவியும் ஒரே மாதிரியான கதைகளில் நடிப்பதை விட, ஒவ்வொரு படத்தின் கதையையும் வித்தியாசமாக தேர்வு செய்து நடித்து வரும் நிலையில், இவர்கள் இருவருமே ஒரே படத்தில் நடிப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. மஞ்சள் நிற பட்டு புடவையில் பொங்கல் பிரபல ஹீரோயினுடன் பொங்கல் வைத்த கீர்த்தி சுரேஷ்!

Scroll to load tweet…

இப்படத்திற்கு 'இறைவன்' என்கிற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதையும் படக்குழு தெரிவித்துள்ளது. ஹரி வேதாந்த் ஒளிப்பதிவில் உருவாகும் இறைவன் படத்திற்கு மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்கிறார். இப்படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.