முதலமைச்சரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரும் கூட்டம் நேரமாக ஆக அதிகரித்து கொண்டே வருகிறது. முக்கிய முதலமைச்சர்கள் வந்து சென்ற பிறகு திரை உலகத்தை சேர்ந்த ஏராளமானோர் அடுத்தடுத்து அஞ்சலி செலுத்துவதற்கு ஒரே நேரத்தில் வந்தனர். இதனால் அங்கு சற்று நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

உடனடியாக அங்கிருந்த அமைச்சர்கள் எல்லோரையும் பிடித்து தள்ளி அப்புற படுத்தினர்.அப்போது ஏற்பட்ட நெரிசலில் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, ரேகா,சுகன்யா நடிகர்கள் சசிக்குமார், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோர் சிக்கி தவித்தனர்.

அவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் மாடி கொண்டனர்.இந்நிலையில் அங்கு வந்த நடிகர் சிம்புவையும் அங்கிருந்தோர் அப்புறப்படுத்த முயன்றனர்.

இதனால் கோபமடைந்த சிம்பு அவர்களை பார்த்து எல்லாவற்றையும் நான் பார்த்து கொள்கிறேன் என்று எகிறினார்.

இதனால் அங்கிருந்த அரசியல்வாதிகள் அமைதியாயினர்.தொடர்ந்து அவர் அஞ்சலி செலுத்தி விட்டு சென்றார்.