கோலிவுட்டை கலக்கி வரும் மாஸ் ஹீரோ 'தல அஜித்' இவர் ரசிகர் மன்றத்தை கலைத்தும் கூட இவருக்கு பல மாவட்டங்களிலும் ரசிகர்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

மேலும்  அஜித் ரசிகர் மன்றம் மூலம் பல நல்ல விஷயங்களை செய்தும் வருகின்றனர்.

இவர்கள் செய்வதற்கு ஏற்ற மனம் உடையவர் அஜித், காரணம்  சினிமா துறையிலும் சரி அவர் பார்த்தவர்களில் யார் கஷ்ட பட்டாலும் உடனே அவர்களுக்கு உதவி செய்பவர்.

இந்த மனதை நன்கு புரிந்தவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, இவர் பொதுவாகவே அனைவர்க்கும் மரியாதை கொடுக்கும் குணம் உடையவர்.

நாம், பெரும்பாலும் அஜித் , தல ஏன்று தான் அவரை கூப்பிடுவோம் , ஆனால் ஜெயலலிதா மிஸ்டர் அஜித் குமார் என்று முழு பெயரோடுதான் கூப்பிடுவாராம். 

அதே போல் அஜித்தை ஒரு ஒரு முறை பார்க்கும் போதும் ஷாலினியை பற்றியும் அஜித் உடல் நிலை பற்றியும் அறிந்து கொள்ளும் அன்பு நெஞ்சமாய் விளங்கியவர் ஜெயலலிதா.