உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய்யின், மாமியாருக்கு பொதுவாக அவரின் அனுமதியை பெறாமல் புகைப்படங்கள் எடுத்தால் பிடிக்காது. பல முறை, இப்படி நடந்ததற்காக ரசிகர்களை திட்டியுள்ளார் ஜெயா பச்சன்.

இந்நிலையில் தற்போது இதே போல் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. 

ஜெயாபச்சன், பிரபல இயக்குனர் கரண் ஜோஹரின் தாய் ஹிரோ ஜோஹரின் 76 ஆவது பிறந்தநாள் விழா, பிரபல நட்சத்திர ஓட்டத்தில் பிரமாண்டமாக நடந்தது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு அவரை வாழ்த்தினர்.

 

இந்த பிறந்த நாள் விழா முடிந்து ஜெயாபச்சன் வெளியே வந்த போது, ரசிகர் ஒருவர் தூரமாக நின்று, தன்னுடைய மொபைல் போன் மூலம் போட்டோ எடுத்துள்ளார். இதனால் கடுப்பான ஜெயாபச்சன்... ரசிகரை அழைத்து அனைவர் மத்தியிலும் திட்டியுள்ளார். இந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. 

இதற்கு பலரும், அந்த இளைஞருக்கு ஆதரவாக, செல்பி எடுத்தால் தப்பு, ஆனால் பிரபலங்கள் என்றால் தூரமாக இருந்து புகைப்படம் எடுப்பது வழக்கம் தானே என கூறி வருகிறார்கள்.

அந்த வீடியோ இதோ:    

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#jayabachchan at #hiroojohar birthday lunch @viralbhayani

A post shared by Viral Bhayani (@viralbhayani) on Mar 18, 2019 at 4:12am PDT