அச்சச்சோ ஷாருக்கானுக்கு என்னாச்சு... அமெரிக்காவில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த ஜவான் நாயகன்
பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் ஷாருக்கான் படப்பிடிப்பிற்காக அமெரிக்கா சென்றபோது விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். அட்லீ இயக்கத்தில் இவர் நடித்துள்ள ஜவான் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். அதேபோல் வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ள இப்படத்தில் யோகிபாபு, பிரியாமணி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் ஜவான் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந் தேதி திரைக்கு வர உள்ளது.
ஜவான் படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் தற்போது படு ஜோராக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் டிரைலரும் வெளியாக உள்ளது. வருகிற ஜூலை 7-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ள டாம் குரூஸின் மிஷன் இம்பாசிபிள் படத்துடன் ஜவான் படத்தின் டிரைலரும் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... "மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கிறேன்".. அட்டகாசமான நாளில் வந்த சசிகுமாரின் அடுத்த பட அப்டேட்!
ஜவான் படத்தை தொடர்ந்து தன்னுடைய அடுத்த பட பணிகளில் பிசியான ஷாருக்கான், அதற்காக அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். அங்கு படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது எதிர்பாரா விதமாக விபத்தில் சிக்கி உள்ளார். இதில் அவரது மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியதை பார்த்து பதறிப்போன படக்குழு அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மூக்கில் அறுவை சிகிச்சை செய்துள்ளார்களாம். இதையடுத்து இந்தியா திரும்பியுள்ள ஷாருக்கான் தற்போது படிப்படியாக குணமாகி வருகிறாராம். இதுகுறித்து நடிகர் ஷாருக்கான் தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் பாலிவுட் ஊடகங்களில் செய்தி வெளியானதை பார்த்து பதறிப்போன ரசிகர்கள், அவர் விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... நாடி நரம்பில் புகுந்து மயக்குது தலைவா.. இசைப்புயலை புகழ்ந்து தள்ளிய செல்வராகவன் - முழு விவரம் உள்ளே!