Asianet News TamilAsianet News Tamil

"மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கிறேன்".. அட்டகாசமான நாளில் வந்த சசிகுமாரின் அடுத்த பட அப்டேட்!

இயக்குனர் பாலா மற்றும் நடிகர் விக்ரம் காம்பினேஷனில் உருவான முதல் திரைப்படமான சேது திரைப்படத்தில், பாலாவின் உதவி இயக்குநராக களமிறங்கிவர் தான் சசிகுமார். சேது படம் குறித்த பல நினைவுகளை அவர் பல பேட்டிகளில் பகிர்ந்துள்ளார்.

Tamil Movie Director and Actor Sasikumar Tweet about Subramaniapuram movie and his next direction
Author
First Published Jul 4, 2023, 12:30 PM IST | Last Updated Jul 4, 2023, 1:18 PM IST

தமிழ் திரைஉலகில் பிரபலமான இயக்குனர்களான பாலா மற்றும் அமீர் ஆகிய இருவரிடமும் உதவி இயக்குனராக பணிபுரிந்து, அதன் பிறகு இயக்குனர் அந்தஸ்துக்கு உயர்ந்தவர் தான் சசிகுமார். தான் இயக்கிய முதல் படமான "சுப்ரமணியபுரம்" படத்திற்காக மூன்று விருதுகளை பெற்றவர் அவர். 

சரியாக 15 ஆண்டுகளுக்கு முன்பு இதே ஜூலை நான்காம் தேதி தான் "சுப்ரமணியபுரம்" திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி திரைப்படமாக மாறியது. ஆனால் சசிகுமார் அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து "ஈசன்" என்ற திரைப்படத்தை இயக்கியதோடு, சுமார் 13 ஆண்டு காலமாக எந்த படத்தையும் இயக்காமல் இருந்து வருகின்றார்.

இதையும் படியுங்கள் : ஆம்பளைங்க இடுப்புல கை வச்சா அனுபவிக்கனும் - ரேகா நாயர் அட்வைஸ்! 

ஆனால் இந்த 13 ஆண்டுகளில் ஒரு சிறந்த நடிகர் என்று போற்றப்படும் அளவிற்கு பல திரைப்படங்களை தனது நடிப்பால் வெற்றி திரைப்படங்களாக மாற்றியவர் சசிகுமார். குறிப்பாக அண்மையில் இவருடைய நடிப்பில் வெளியான "அயோத்தி" என்ற திரைப்படம், ஒரு சூப்பர் ஹிட் திரைப்படம் என்றே கூறலாம். 

இந்த படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது ட்விட்டர் பதிவின் மூலம் இயக்குனருக்கும், அந்த படத்தில் நடித்த நடிகர்கள் அனைவருக்கும், குறிப்பாக சசிகுமாரை தனது நண்பர் என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்பொழுது "பகைவனுக்கு அருள்வாய்" என்ற திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். அதே போல மேலும் இரு திரைப்படங்கள், அவருடைய நடிப்பில் உருவாகி வரும் நிலையில், இன்று தனது முதல் திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்ததை நிறைவுகூர்ந்த அவர், மக்களாகிய நீங்கள் அந்த படத்தை மாபெரும் வெற்றி திரைப்படமாக மாற்றிக் கொடுத்ததற்கு என்றும் நான் நன்றி கடன் பட்டவன் என்று கூறியுள்ளார். 

மேலு இந்த அருமையான நாளில் நான் மீண்டும் ஒரு இயக்குனராக களம் இறங்க உள்ளேன், அடுத்த படம் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்றும் கூறி, அவருடைய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் சசிகுமார்.

இதையும் படியுங்கள் : இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு -லியோ படத்தில் இணைந்த அடுத்த பிரபலம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios