மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், தற்போது பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வருகிறார்.  இவர் அறிமுகமான 'தடக்' திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்த படத்தைத் தொடர்ந்து தற்போது கரண் ஜோகர் இயக்கிவரும் வரலாற்று கதையம்சம் கொண்ட படத்தில் நடித்து வருகிறார். இப்படம் மல்டி ஸ்டார் படமாக உருவாகி வருகிறது. மேலும் அடுத்ததாக அஜீத் நடிக்க உள்ள 60 வது படத்தில் ஜான்வி, தமிழில் அறிமுகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தை அவருடைய தந்தை போனி கபூர் தயாரிக்கிறார். இயக்குனர் எச்.வினோத் இயக்கவுள்ளார். இந்நிலையில் ஜான்வி கபூர் ஹிந்தி பாடலுக்கு பெல்லி டான்ஸ் ஆடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் அவருடைய நடன அசைவுகள் மற்றும் நளினம் அனைவரையும் ரசிக்க வைக்கும் படியாக உள்ளது என பலர் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர். 

வைரலாகும் வீடியோ இதோ...