விஜய்யின் ஜன நாயகன் படத்தில் இந்த வாரிசு நடிகையா?... வைரலாகும் செம ஹாட் தகவல்
விஜய் நடித்து வரும் ஜன நாயகன் படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் தற்போது, மற்றொரு முன்னணி வாரி நடிகை ஒருவர் இந்த படத்தில் இணைந்துள்ள வெளியான தகவலால் படத்தின் கதை என்னவாக இருக்கும்? வாரிசு நடிகைக்கு படத்தில் என்ன ரோல் என்பது போன்ற கேள்விகள் பரவ துவங்கி உள்ளது.

இளைய தளபதி விஜய் நடித்து வரும் ஜன நாயகன் படத்தில் முன்னணி ஹீரோயினான வாரிசு நடிகை நடிகை ஒருவர் மிக முக்கியமான ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் ஒன்று சோஷியல் மீடியாக்களில் வைரலாக பரவி வருகிறது.
டைரக்டர் ஹச்.வினோத் இயக்கத்தில் விஜய் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். விஜய்யின் 69 வது படமான இதற்கு ஜன நாயகன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு சமீபத்தில் விஜய் 69 படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகியவற்றை படக்குழு வெளியிட்டது. விஜய் தீவிர அரசியலுக்குள் என்ட்ரியா ஆவதற்கு முன் நடிக்கும் கடைசி படம் இது என சொல்லப்படுவதால் படத்தின் டைரக்டர் அறிவிக்கப்பட்டதுமே அதிகரிக்க துவங்கி விட்டது.
விஜய்யின் கடைசிப் படம்
விஜய்யின் கடைசி படத்திற்கு ஜனநாயகன் என பெயரிடப்பட்டுள்ளதால் நிச்சயம் இதில் விஜய்யின் அரசியல் பஞ்சுகள், அனல் தெறிக்கும் டயலாக்குகள் உள்ளிட்ட பல அதிரடிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் சென்னையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி ஆபிஸ் அமைந்துள்ள பனையூரில் துவங்கி, நடந்து வருகிறது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ்ராஜ், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
புலிக்குப் பிறகு மீண்டும் இணையும் ஸ்ருதி ஹாசன்
ஷூட்டிங் துவங்கி சில நாட்கள் மட்டுமே ஆவதால் அப்டேட் எதுவும் இருக்காது என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக ஜன நாயகன் பற்றிய புதிய அப்டேட் ஒன்று தீயாய் பரவி வருகிறது. அதாவது, ஜனநாயகன் படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் மிக முக்கியமான ரோலில் நடிக்க உள்ளதாக தான் தகவல் பரவுகிறது. ஆனால் இது பற்றி படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. அதே சமயம் சோஷியல் மீடியாவில் செம வைரலாகி வரும் இந்த தகவலை ஜன நாயகன் படக்குழு இதுவரை மறுக்கவும் இல்லை.
ஒருவேளை ஜனநாயகன் படத்தில் ஸ்ருதி ஹாசன் நடிப்பதாக வெளியான தகவல் உண்மை என்றால், விஜய்யுடன் அவர் இணையும் இரண்டாவது படம் இதுவாக இருக்கும். இதற்கு முன் 2015ம் ஆண்டு சிம்புதேவன் இயக்கிய புலி படத்தில் விஜய்யின் மனைவி ரோலில் ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தார். தற்போது 10 ஆண்டுகள் கழித்து விஜய்யுடன் மீண்டும் நடிக்க உள்ளார். ஜனநாயகன் படத்தில் மற்றொரு ஹீரோயினாக ஸ்ருதி ஹாசன் நடிக்க போகிறாரா அல்லது கேரக்டர் ரோலில் நடிக்க போகிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
என்ன மாதிரியான ரோலாக இருக்கும்?
தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ருதி ஹாசன் 2023ம் ஆண்டு தெலுங்கில் நடித்த சாலர் முதல் பாகத்திற்கு பிறகு படங்கள் எதிலும் நடிக்கவில்லை. கிட்டதட்ட 2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட்டாகி வருகிறார். இவர் ஏற்கனவே டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்திலும், டிரெயின் என்ற படத்திலும் நடிக்க கமிட்டாகி உள்ளார். இதற்கு பிறகு சாலர் 2 படத்திலும் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் ஜன நாயகன் படமும் அவரது பட பட்டியலில் இணைந்துள்ளதாக சொல்லப்படுவதால் மீண்டும் தென்னிந்திய சினிமாவில் ஸ்ருதி ஹாசன் முன்னணி நடிகை இடத்தை பிடிப்பார் என சொல்லப்படுகிறது.