பல்லாண்டு காலமாக தமிழர்களால் நடத்தப்பட்டு வந்த உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கடந்த சில ஆண்டுகள் தடைக்கு பின் தற்போது மீண்டும் இன்று நடந்து வருகிறது. 

பிள்ளைகள் போல் வீரத்தை ஊட்டி வளர்த்த காளைகளை போருக்கு அனுப்பும் தோரணையில் மாடுபிடி வீரர்கள் அவிழ்த்து விட , அடங்காமல் திமிறும் காளைகளை திமிலை அணைத்து காளையர்களின் அடக்கிய கண்கொள்ளா காட்சியை ஆயிரக்கணக்கானோர் நேரில் ரசித்து வருகின்றனர்.

இதில் மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், இலங்கை அமைச்சர் தொண்டைமான் உள்பட பல விஐபிக்கள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை நேரில் பார்த்து ரசித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் நடத்திய எழுச்சி போராட்டத்திற்கு தங்களுடைய முழு ஆதரவை கொடுத்த பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் ஆரி ஆகிய நடிகர்கள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை நேரில் பார்க்க வருகை தந்துள்ளனர். 

மாணவர்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியால் நடைபெறும் ஜல்லிக்கட்டில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிப்பதாக அலங்காநல்லூரில் நடிகர் லாரன்ஸ் கூறியுள்ளார்.