சிம்பு எப்போதுமே மனதில் பட்ட கருத்தை ஒளிவு மறைவு இல்லாமல் பேசுபவர் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் தமிழகத்தின் உணர்ச்சிகரமான பிரச்சனையான ஜல்லிக்கட்டு குறித்து அவர் தனது கருத்தை மிகவும் தைரியமாக பதிவு செய்துள்ளார்.
சுப்ரீம் கோர்ட் தடை காரணமாக ஜல்லிக்கட்டு இந்த ஆண்டாவது நடைபெறுமா என ஒட்டுமொத்த தமிழர்களும் ஏங்கியிருக்கும் நிலையில் சிம்புவின் இந்த கருத்து ஆறுதலான ஒன்றாக உள்ளது.
சிம்பு கூறியது "ஜல்லிக்கட்டு தமிழனின் கலாச்சார அடையாளம். இந்த வீர விளையாட்டு நமது வாழ்வில் ஒருங்கிணைந்து பயணித்து வந்துள்ளது.
எதோ சில தனிப்பட்ட நபர்களும், சில தன்னார்வ அமைப்புகளும் தங்களுடைய விலாச தேவைக்காக அதிகாரத்தில் இருப்போரையும், நீதித் துறையையும் தவறான தகவல்கள் மூலம் வழி நடத்தி நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டை நடத்த விடாமல் செய்கின்றனர்.
அரசும், நீதித் துறையும் கடினமாக, கண்டிப்பாக நடந்துகொள்ள பல்வேறு கொழுந்துவிட்டு எரியும் பிரச்சினைகள் இருக்கும்போது, ஜல்லிக்கட்டை தடை செய்வதுதான் முக்கிய கடமை என்று மல்லுக் கட்டுவது ஏன் என்பது எனக்கு புரியவில்லை.
ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் வீர உணர்வை பறைசாற்றும் கெத்தான விளையாட்டு மட்டும் அல்ல; நம் நாட்டு மாட்டினங்கள் அழியாமல் காத்திடும் பாரம்பரிய முறை. ஆனால், உச்ச நீதிமன்ற தடை காரணமாக, இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போய்விட்டது என்றும்.
மீண்டும் நம் தமிழர்களின் இந்த பாரம்பரிய விளையாட்டை தடை நீக்கி இந்த வருடம் சந்தோஷமாக வீர விளையாட்டை விளையாட அனுமதிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
