ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது . எப்படியும் இந்த போராட்டத்தில் வென்றே தீருவது என்ற உறுதியுடன் லட்சக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

 ஜல்லிக்கட்டை மீட்பது மட்டும் இன்றி , பீட்டாவை இந்தியாவை விட்டே துரத்துவதற்கும் சேர்த்துதான் இந்த போராட்டம் என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளையமகள் செளந்தர்யா ரஜினிகாந்த் பீட்டாவின் உறுப்பினர் என்றும் அவருடைய வழிகாட்டுதலின் பேரில்தான் பல நடிகர், நடிகைகள் பீட்டாவில் உறுப்பினர் ஆனதாகவும் ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவியது.

இந்த தகவல் முற்றிலும் வதந்தி என கூறி செளந்தர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். 

மேலும் நான் பீட்டா அமைப்பினர் உறுப்பினர் அல்ல என்றும் , ஜல்லிக்கட்டுக்கு நான் முழு ஆதரவு அளிக்கின்றேன் என்றும் அவர் கூறியுள்ளார். 

செளந்தர்யாவின் இந்த விளக்கத்தை கொடுத்துள்ளது ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கோபம் தன் மீது திருப்பிவிடும் என்கிற பயத்தினாலேயே தற்போது இப்படி ஒரு விளக்கத்தை அவர் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது .