ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு கொடுத்து சேலத்தில் 5000 மாணவர்கள் ஒன்று, கூடியும் அவர்களுக்கு ஆதரவாக ஆயிர கணக்கான பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சேலம் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் தீடீர் என நடிகரும் இயக்குனருமான சமுத்திரகனி கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது மாணவர்களிடம் பேசிய அவர், தற்போது மாணவர்கள் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை மீட்க இப்படி ஒரு முயற்ச்சியை கையில் எடுத்திருப்பதற்கு என் வாழ்த்துக்கள்.

நீங்கள் தான் நாளை இந்த நாட்டை ஆளப்பிறந்தவர்கள் இப்போது உங்களை முன்னே விட்டு நாங்கள் பின்னல் நடக்க தயாராக இருக்கிறோம், இதனை வெளிப்படுத்தும் விதமாகவும், இளைஞர்களை நாங்கள் முழுமையாக நம்புகிறோம் என்பதற்கு எடுத்து காட்டாக இந்த போராட்டம் அமைந்துள்ளது என தெரிவித்தார்.

மேலும் அமெரிக்க நிறுவனமான பீட்டாவை வெளியேற்ற முழு முயற்சியோடு எதிர்ப்போம், என கூறிய அவர் , ஜல்லிக்கட்டு பிரச்னையை இளைஞர்கள் நீங்கள் கையில் எடுத்து போராடுவது போல, வயிற்றிற்கு சோறு போடும் விவசாயிகளின் பிரச்சனையையும் கையியல் எடுத்து போராடி வெற்றி பெற வேண்டும் என கூறியுள்ளார் .